அலர்ஜி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் இந்த சாதம்
பொதுவாக இந்த தலை முறையினர் காலையில் இட்லி ,தோசை ,பொங்கல்,பூரி என்று சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமின்றி இருக்கின்றனர் ,பல வீடுகளில் இரவு நேரத்தில் கூட சப்பாத்தி ,தோசை என்று சமைப்பதால் பழைய சோறு கிடைக்காமல் போகிறது .இதன் மூலம் எப்படி ஆரோக்கியமாய் வாழலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.பல நோய்க்ளை இந்த பழைய சோறு மூலம் குணமாகிறது .
2.குறிப்பாக உடல் உஷ்ணம் ,அல்சர் ,ரத்த அழுத்தம் ,மல சிக்கல் ,எலும்பு தேய்மானம் ,போன்ற நோய்கள் குணமாகும் .
3.மேலும் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
4.பழைய சாதத்தில் உருவாகக்கூடிய லட்சக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகி அதில் லாக்டிக் ஆசிட் மூலம் புளிப்பு சுவையை பெறுகிறது.
5.பழைய சாதம் சாப்பிடும் பொழுது நாள் முழுவதும் சோர்வு வராமல் நம்மால் வேலை செய்ய முடிகிறது.
6.பழைய சாதத்தில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கலை நீக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல் எடை குறைப்பதிலும் பெருமளவு துணை புரிகிறது.
7.பழைய சாதம் உடலை சீராக இயங்க செய்து உள்ளிருந்து சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறது.
8.பழைய சாதம் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதை விரட்டி ஓட வைக்கிறது