கோரை பாயில் படுத்து தூங்கினா நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 
sleep

பொதுவாக கோரைப்பாயில் உறங்கினால், உடல் சூடு போக்கி குளர்ச்சியை தரும். ஆதி மனிதன் சாணம் மெழுகிய தரையில் ஆரோக்கியமாக தூங்க ஆரம்பித்து இன்று நவீன மனிதன் மெத்தையில் படுத்து வியாதிகளோடு வாழ்கிறான்

1.பொதுவாக ஒரு மனிதன் கோரைப் பாயில் படுத்து உறங்கினால் அது நம் உடல் சூட்டை உள்வாங்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
2.எனவே அந்த பாயில் படுப்பதால் உடலில் இருக்கும் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி பெற்று நோய்கள் நம்மை அண்டாது ..அப்படி படுப்பதால்  உடல் குளிர்ச்சி அடைந்தால் ஆரோக்கியம் பலப்படும்.
3.மேலும் கருவுற்ற தாய்மார்கள் மெத்தையில் படுப்பதை விட பாயில் உறங்கும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அவர்களுக்கு சிசேரியன் இன்றி சுகப்பிரசவம் ஆகும்.

Sleeping
4.மேலும் இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகளும் அவர்களுக்கு எந்த மருந்துமின்றி வெகுவாக குறைந்துவிடும்.
5.இப்படி பாயில் உறங்குவதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. குழந்தை பிறந்த பிறகும் பாயில் உறங்க வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
6.இதனால் சிசிவிற்கு கழுத்தில் ஏற்படும் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். பச்சிளம் குழந்தைக்கு பாயில் படுப்பதால்  குழந்தையின் முதுகெழும்பு சீராகி, குழந்தை வேகமாக வளர உதவும். 7.சிசுவின் நலனுக்காகவும், தாயின் நலனுக்காகவும் மெத்தையை தவிர்த்து பாயை பயன்படுத்தி மீண்டும் நாம் இழந்த ஆரோக்கியத்தை பெறலாம்