பெண்கள் இந்த ஆறு வழிகளை பின்பற்றினால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்
பொதுவாக எந்த ஒரு பெண்ணும் தான் கர்ப்பமானவுடன் முதல் 4,5 மாதங்கள் குழந்தையின் உருவம் உருவாகும் என்பதால் எந்த நோய் தொற்றும் தாய்க்கு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் .தாய்க்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது குழந்தையின் இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் .எப்படி ஆரோக்கியமான குழந்தை உருவாகும் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் போது அவர்களுக்கு குறைபாடுள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2.பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட்டால்தான் ஆரோக்யமான பிள்ளை பெற்றெடுக்கலாம்
3.ஒரு சில பெண்களுக்கு கர்ப்பமாயிருக்கும்போது அதீத ரத்த அழுத்தம் பாதிப்பு உண்டாகும் .இந்த கர்ப்ப காலத்தில் இப்படி ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
4.கர்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளை உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறக்க செய்து விடும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்
5.கர்ப்ப காலத்தில் இந்த நீரிழிவு பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள் மிகுந்த உடல் நல பிரச்சனைகளை சந்திப்பதோடு, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கும் அது பாதிப்பை உண்டாக்குகிறது
6.ஆறு முதல் ஏழு மாதத்தில் குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்