சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் தேய்க்க என்ன நேரும் தெரியுமா ?
பொதுவாக முடியை பராமரிக்க வில்லையென்றால் பொடுகு தொல்லை ,இள நரை ,முன் வழுக்கை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு அது நம்மை மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும் .எனவே பின்வரும் முறையில் தலை முடியை பராமரிப்போம்
1.முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும்.
2.இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
3.ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்
4.கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு மெல்லிய தீயில் அடுப்பில் வைக்கவும்.நிறம் மாறிய எண்ணெய் ஆறியதும் அதனை எடுத்து தலையில் தேய்க்க பொடுகு போய் விடும் .
5.எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தலையில் தேயுங்கள். வாரம் இருமுறை செய்தால் பொடுகு மறைந்து முடி ஆரோக்கியம் சிறக்கும்
6.தலை முடி கொட்டி கொண்டேயிருந்தால் ,சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது குறையும்.