பாதங்களில் அலர்ஜி ஏற்படாமல் எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா ?
பொதுவாக பாதங்களில் அலர்ஜி ஏற்படாமலும் ,துவைக்காத சாக்ஸ் மூலம் நோய் தொற்று ஏற்படாமலும் இருக்க வினிகர் உதவுகிறது .இந்த பாதத்தை எப்படி நாம் பாதுகாக்கலாம் என்று நாம் காணலாம்
1. அடிக்கடி வினிகரில் நம் பாதங்களை வைப்பது செகண்ட் ஹார்ட் என்று சொல்லப்படும் பாதங்களில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் .
2.உலர்ந்த பாதங்களும் மற்றும் பாதங்களில் உள்ள வெடிப்புகளும் பாா்ப்பதற்கு அகோரமாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அவை வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
3..வினிகரில் இருக்கும் அமிலத் தன்மை, நமது பாதங்களுக்கு ஒரு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. மேலும் பாதங்களை வினிகரில் நனைக்கும் போது நமது பாதங்கள் மென்மையைப் பெறுகிறது.எப்படி பாதங்களை வைக்கலாம் என்று பார்ப்போம்
4.ஒரு சிறிய அளவிலான வாளி அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
5.அதில் 1 பொிய டம்ளா் வினிகருக்கு 2 பொிய டம்ளா் வெந்நீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு நமது பாதங்கள் நனையும் அளவுக்கு வாளியை வினிகரும், வெந்நீரும் கலந்த கலவையால் நிரப்ப வேண்டும்
6..பின்னர் அதில் பாதங்களை வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்