தினந்தோறும் ஊறவைக்கப்பட்ட காய்ந்த திராட்சைகளை தேனுடன் சாப்பிட என்ன நன்மை தெரியுமா ?

 
honey

பொதுவாக  உளர் திராட்சையில் ஏராளமான உடல் நன்மைகள் அடங்கியுள்ளது .இதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த தண்ணீருடன் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு உண்டு .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் தீர்ந்து ஒழுங்காய் மாதவிடாய் வரும் .
2.அடுத்து சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு பலருக்கு ஏற்படும் கிட்னி பிரச்சினைகளை இந்த திராட்சை தீர்க்கும் .
3.கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்து பாடாய் படுத்தி எடுக்கும்போது இதை சாப்பிட்டால் அந்த கொழுப்பு கரைந்து விடும்  ,
4.மேலும் இதன் மூலம் ரத்த சோகை ,உடல் வெப்பம் போன்ற பிரச்சினைகளும் நம்மை விட்டு அகன்று விடும்
5.சிலருக்கு மல சிக்கல் தீரவே தீராது . சரியான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

toilet
6.மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 4 காய்ந்த திராட்சைகளை இரவு நீரில் ஊற வைத்து, விடிந்ததும் காலை உணவை உண்பதற்கு முன்பு அவற்றை சாப்பிட இந்த தொல்லை நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்  
7.சிலர் எப்போதும் சோர்வாக ஒல்லியாக இருப்பார்கள் . சிலருக்கு இந்த சராசரி அளவைக்காட்டிலும் மிக குறைந்த எடை இருக்கிறது.
8.அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ஊறவைக்கப்பட்ட காய்ந்த திராட்சைகளை தேன் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரித்து ஆரோக்கியம் கூடும்