நாள் பட்ட இருமலை அலட்சியம் செய்தால் அது எந்த ஆபத்தில் கொண்டு போய் விடும் தெரியுமா ?
பொதுவாக பின்வரும் அறிகுறியுடன் இருமல் இருந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே ஒரு மருத்துவரை அணுகுவது சிறந்தது .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சிலருக்கு கோவிட்-19 தொற்று நுரையீரல் அழற்சி மற்றும் வறட்டு இருமலுக்கும் வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .
2.சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் ,இந்த புகைப்பிடிப்பவரின் இருமல் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகக்கூட இது இருக்கலாம்.
3.சிலருக்கு நிமோனியா தொற்றால் இருமல் வரும் .இந்த நிமோனியா ஒரு உலர் இருமல் அல்லது பச்சை, மஞ்சள் அல்லது இரத்தம் தோய்ந்த சளியுடன் இருமலை ஏற்படுத்தலாம். .
4.சிலரின் நுரையீரலை முக்கியமாக பாதிக்கும் ஒரு தீவிர தொற்று காசநோயாகும். சிலருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்கும் .இப்படி நீடித்தால், அது காசநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
5.சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் இருமலுக்கு வழிவகுக்கலாம்.
6.புற்றுநோய் இருந்தால் உங்களுக்கு தொடர் இருமல் இருக்கும் மற்றும் அது காலப்போக்கில் இன்னும் மோசமாகிவிடும்.எனவே இருமலை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்