பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் வைக்க எந்த நோய் ஓடிவிடும் தெரியுமா ?

 
Health Benefits of Garlic Health Benefits of Garlic

பொதுவாக  கால் ஆணியுள்ளோரின் செருப்பை அணிவதாலும் கால் ஆணி உண்டாகிறது .
மேலும் கால் பாதங்களில் சிறு கொப்புளம் போல் உண்டாவதைத்தான் ஆணி என்கிறோம் . கால் ஆணி வந்து விட்டால் அதை குணமாக்க சில இயற்கை வழிகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.கால்களில் ஆணி வளர்ந்தால் அம்மான் பச்சரிசி பாலை கால்களில் ஆணி உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால்  சரியாகும் .குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது இதை தடவ வேண்டும்

garlic
2.மேலும் அமிர்த வெண்ணெய் மற்றும் வங்க வெண்ணெய்யை கால்களில் ஆணி உள்ள இடங்களில் தொடர்ந்து போட்டுவந்தால் ஆணி கால் கூடிய சீக்கிரம் காணாமல் போகும்  
3.கால்களில் ஆணி வளரத்தொடங்கும்போதே அதை கவனிக்க வேண்டும் .அப்படி  ஆரம்பத்திலேயே கொடிவேலி வேர், மஞ்சள் இவைகளை சூடுபடுத்தி பாதங்களில் ஆணி இருக்கும் இடங்களில் தடவினால் இந்த ஆணி குணமாகும்
4.மேலும் ஆணி உள்ள இடத்தில் பூண்டை நசுக்கி அதன் சாறை ஆணி உள்ள இடத்தில் தடவி வர வேண்டும் .அப்படி செய்தால் நாளடைவில் ஆணி குணமாகும்