குளிர்ந்த நீரில் குளிப்பதால் என்னென்ன ஆரோக்கியம் ஏற்படும் தெரியுமா ?
பொதுவாக குளிர்காலத்தில் பலர் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதைத்தான் விரும்புகின்றனர் .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .குளிப்பதன் ஆரோக்கிய நன்மை குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.பலருக்கு காலை வேளையில் டீ ,காப்பி குடிப்பது பிடிப்பது போல குளிப்பதையும் பழக்கமாக்கி கொள்ள வேண்டும் .
2.அதுவும் அந்த நீர் குளிர்ந்த நீராக இருந்தால் மிக சிறந்தது .இது நம் மூளைக்கு புத்துணர்வை தரும் .மேலும் அன்றைய நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்
3.நாம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க குளிப்பதற்கென்று சில வழி முறைகள் உள்ளன .அவை பற்றி பார்க்கலாம் .
4.கோடை காலத்தில் குளியல் மிக அவசியம். சரியான முறையில் இல்லாவிட்டால் சருமம் மற்றும் தலைமுடியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு.
5.பருவ காலத்துக்கு ஏற்ப நீரை பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும் போது அதிக சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
6.சூடான நீரை பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலுவிழக்க தொடங்கும். மிதமாக சுடுநீரை பயன்படுத்துவதே சிறந்தது.
7. கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளித்து வந்தால் தோலில் வறட்சி ஏற்படாது