குழந்தைகளுக்கு வரும் வாயுத்தொல்லையை எப்படி வேரறுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக இந்த காலத்தில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் .குழந்தையின் சிறு உடல் உபாதைகளுக்கு சில வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்
1.மிளகு அரைத் தேக்கரண்டி, மற்றும் உப்பு அரைத் தேக்கரண்டி ஆகிய இரண்டையும் சேர்த்து வழுவழுப்பாய் அரைத்து கொள்ளவும் .
2.இந்த கலவையை ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து கொள்ளவும் .பிறகு அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கொள்ளவும்
3.மேற்கண்ட கலவையை குழந்தைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால் அஜீரணம் கோளாறு விலகி குழந்தை நன்றாக சாப்பிடும் .
4.அடுத்து ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, உப்பு, வசம்பு ஆகிய மூன்றையும் சோ்த்து சுட்டு, கரியாக்கி பொடி செய்து கொள்ள வேண்டும்.
5.இதை குழைத்து குழந்தைகளுக்கு தொப்புளைச் சுற்றி போட்டு வந்தால் குழந்தையின் வயிறு உப்புசம் குறைந்து நல்லா பசியெடுக்கும் .
6..பூண்டு, குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து கொள்ளவும் .பின்னர் அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு சிறிது கொடுத்து வந்தால் குழந்தையின் வயிற்றுப் பூச்சிகள் மலம் வழியாக வந்து விடும்
7.. ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு தொல்லை பாடாய் படுத்தி குழந்தை அழுது கொண்டிருக்கும் .
8.இந்த வாயு தொல்லை குறைய வேலிபருத்தி வேரை பொடி செய்து கொள்ள வேண்டும். அதில் நான்கு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் குழந்தையின் வாயு தொல்லை சரியாகும்.