கெட்ட கொழுப்பை கிட்ட சேர விடாமல் இதயத்தை காப்பாற்றும் முறைகள்

 
preserved foods

பொதுவாக  கெட்ட கொழுப்பை தவிர்க்க  ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்றவை நம் இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் உணவுகள் .
1.உடலில் அதிகப்படியாக இருக்ககூடிய கெட்ட கொழுப்பினை
10 சதவீதம் வரை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய்
பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காக்கும்.
2.கொழுப்பு உணவுகள் என்று எல்லாவற்றையும் தவிர்த்திட முடியாது.
கொழுப்பும் உடலின் சீரான இயக்கத்திற்கு அவசியம்.

Fast Food
3.கொழுப்பு வகைகளில்
இருக்கக்கூடிய சாச்சுரேட்டட் ஃபேட் தான் இதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
4.வெண்ணைய், எண்ணெய், க்ரீம், கறி போன்ற உணவுகளில் இந்த கொழுப்பு அதிகமிருக்கும். அதனால் எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே நாம் இதய பிரச்சினைகளிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

5.அடுத்து மாவுப் பொருட்கள் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்,
ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறி மற்றும் பழங்களை
அதிகம் சாப்பிட்டால் நம் இதயத்தை கெட்ட கொழுப்பிலிருந்து காக்கலாம் .
6.இவற்றில் இருக்கும் அதிகப்படியான ஃபைபர் நம்மை காக்கும்
மேலும் அவை உங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை
கரைக்க பெரிதும் உதவிடும்..