நம்மை தாக்கும் முதுகு வலியை ஒரு வழி பண்ணலாம் வாங்க

பொதுவாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன்பு ஒரே நிலையில் அமர்ந்திருப்பதே முதுகு வலிக்கு காரணம் .இந்த முதுகு வலியை எப்படி குணமாக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.இந்த வலிகளை தவிர்க்க அடிக்கடி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடமாட வேண்டும் ,இல்லையென்றால் உட்காரும் நிலையை மாற்ற வேண்டும் .
2.இந்த வலிக்கு வெற்றிலை சாறுடன் ,தேங்காய் எண்ணெய் சேர்த்து வலியுள்ள இடத்தில தடவலாம் ,அல்லது வதராயணன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஓத்தடம் கொடுக்கலாம் .
3.அல்லது கொள்ளு ரசம் வைத்து குடிக்கலாம்
4.அலுவகத்திலோ வீட்டில் டிவி பார்க்கும் போதோ
வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.
5.கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம்.
6.இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்தி உங்களுக்கு வலி வராமல் பாதுகாக்கலாம் .