தொற்று நோய் கிருமிகள் தாக்காமல் காக்கும் இந்த மசாலா
பொதுவாக அசைவ சமையல் செய்யும்போது இஞ்சி பூண்டு மசாலா வாசனை நம்மை இழுக்கும் .மேலும் இந்த கலவையால் நம் உடலுக்கும் நிறைய நன்மைகளுண்டு .இதன் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.இவை நம் ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் பல நோய்களை விரட்ட பயன்படுகிறது .
2.இதன்மூலம் குறைந்த இரத்த அழுத்தம்,செரிமானம்,வலிகள் ,ஆஸ்த்மா ,அல்சர் ,புற்று நோய் ,போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
3.பல புது புது வைரஸ் ,பாக்டீரியா கோடை காலம் வந்துவிட்டதால் மக்களை அதிகம் தாக்கி வருகிறது.
4.இந்த வைரஸ் மூலம் ஜூரம், ஜலதோஷம் ஆகியவற்றால் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வருகின்றனர்.
5.அதனால் இந்த வைரஸ்களை சமாளிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துகொள்வது இந்த சீசனில் நோய்கள் வராமல் தடுக்கும் .
6.வைரஸ்களை சமாளிக்க ஆரஞ்சு, எலுமிச்ச, திராட்சை உள்ளிட்ட வைட்டமின் சி ஆகியவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .
7.அதனால் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவை நமக்கு தொற்று நோய் கிருமிகள் தாக்காமல் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.