நாம் உபயோகிக்கும் இந்த விளக்குகளால் நம் உடலுக்கு இவ்ளோ ஆபத்தா ?
பொதுவாக எல் ஈ டி விளக்கும் பல நோய்க்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,இந்த விளக்கால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஒரு ஆய்வில் கூறிய படி மால் ,ஆபீஸ் போன்ற இடங்களில் இருக்கும் இந்த விளக்கால் அந்த இடத்தில் அதிகமாக இருப்போருக்கு பல பாதிப்புகள் உண்டாகிறதாம் .
2.LED விளக்குகள் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது.
3.இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரித்து விடுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது
4.இந்த விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன.
5.இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்பட்டு ஆரோக்கியம் கெடுகிறது .
6.இதன் காரணமாக சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது.
7.LED ஒளியால், குளுக்கோஸின் வளர்சிதை மாற்றம் குறைந்து ,அந்த நபரின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.