இதை படித்தால் காலை உணவை தவிர்க்க மாட்டிங்க சார்
பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர் காலை உணவின் அவசியத்தை உணராமல் அதை தவிர்த்து வருவதால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர் .
1.குறிப்பாக பிரேக் பாஸ்ட்டை தவிர்ப்பதால் அல்சர் மற்றும் அசிடிட்டி ,உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும் .அதனால் இந்த பதிவில் காலை உணவை தவிர்ப்பதால் உண்டாகும் கேடுகள் பற்றி பார்க்கலாம்
2.வெளிநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு எலிகளை வைத்து சோதனை நடத்தினர்.
3.இதில் ஒரு எலிக்கு சத்தான காலை உணவை வழங்கினர்.
4.மற்றொரு எலிக்கு காலை உணவை வழங்காமல் பட்டினி போட்டனர்
5.பின்னர் நான்கு மணி நேரம் கழித்து அந்த இரண்டு எலிகளின் ரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதித்தனர்.
6.இதில் காலை உணவைத் தவிர்த்த எலியின் ரத்தப் பரிசோதனையில் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது
7.ஆனால் காலை உணவை உண்ட எலியின் ரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இருந்திருக்கிறது.
8.இந்த வெள்ளை ரத்த அணுக்களின் குறைபாட்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கான திறன் குறைந்து நாம் பல தொற்று நோய்க்கு உட்படுவோம்
9. மேலும் வெள்ளை அணுக்கள் குறைபாட்டால் இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு உண்டாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.