கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தும் இந்த திரவ பொருள்

 
liquor

பொதுவாக ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானால்,அவருக்கு  விரைவில் முதுமை தோற்றம் ஏற்படும்  என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பதிவில் மதுவின் தீமைகள் பற்றி நாம் காணலாம்
1.ஒருவர் ஆரோக்கியமாய் இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வதும், நன்றாக சாப்பிடுவது மட்டும் போதாது, மதுவையும் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

liquor
2.ஆல்கஹால் சருமத்தில் சுருக்கத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
3.ஆல்கஹால் உடலில் நீரிழப்பு மற்றும் சோம்பலை ஏற்படுத்தி நம்மை சோம்பேறியாக்கும் .
4.ஒருவர் ஆல்கஹாளுக்கு அடிமையானால் அது அவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தும்.
5.ஒருவர் ஓவராக  மது அருந்துவதால் அவரின் மூளை செல்கள் சுருங்கிவிடும்.
6.அதிகமாக மது அருந்துவதால் , சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க இயலாமை, வேலையில் ஒழுங்கற்ற தன்மை, போன்றவை உண்டாகும்
7.மேலும் மதுவுக்கு அடிமையானால் கவனம் செலுத்த இயலாமை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமை  மற்றும் கோபம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.