காபியில் கூடுதல் சர்க்கரை சேர்ப்பதால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
coffee

பொதுவாக காபியை அளவாக எடுத்து கொள்ள சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .மேலும் அதிகமாக காபி குடிப்பதால் என்னென்னெ கேடுகள் உடலில் தோன்றும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.ஒருவர் ஓவராக காபி குடித்து ,அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியநோய்களுக்கு வாசலை திறந்து வைக்கிறது .

coffee
2.ஒருவர் அதிகமாக காபி அருந்துவதன் விளைவாக உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யலாம்.
3.இது நீரிழப்புக்கு வழிவகுத்து கிட்னிக்கு கெடுதல் செய்யும்  
4.சிலர் வெந்நீர், தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை அதிகமாகவோ அதிக சூடாகவோ குடிப்பதுண்டு .இது  உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
5. ஒருவர் படுக்கைக்கு முன் காபி குடிக்க வேண்டாம்.
6.ஏனெனில் இது உங்களுக்கு தூக்கத்தை கெடுப்பதோடு  மற்றும் ஒற்றைத் தலைவலி, சோகம், பதட்டம் மற்றும் மனநிலை மாற்றங்களை உண்டாக்கி உங்களை நிம்மதியிழக்க செய்யும்
7.அது மட்டுமல்லாமல் சிலர்  காபியில் கூடுதல் சர்க்கரை சேர்ப்பர் .இது  கொழுப்பு கல்லீரல் நோயாக உருவாகலாம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் வழி செய்கிறது