தாங்க முடியாத தலை வலியால் தூங்க முடியாமல் அவஸ்த்தையா ?சரி செய்யும் வழிகள்

 
head

என்னேரமும் தலைவலியால் சிலர் தலையை பிடித்து கொண்டு அவஸ்த்தை படுவார்கள் .இந்த தலை வலியால் தினமும் தூங்க முடியாமலும் ,வேறு எந்த வேலையும் செய்ய முடியாமலும் இன்னலுக்கு ஆளாவார்கள் .அப்படிப்பட்ட தலை வலிக்கு சில செலவில்லாத வீட்டு வைத்தியம் உண்டு .அவற்றைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

head ache

இந்த தாங்க முடியாத வலிக்கு உடனடி தீர்வாக இஞ்சிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து வைத்து குடித்து வர நிவாரணம் கிடைக்கும்  . அடுத்து சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போட்டாலும் இந்த பிரச்சினை தீரும் 

. அடுத்து தலை வலி வரும்போது மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி கொண்டால் இந்த எப்பேர்ப்பட்ட வலியும் பஞ்சாய் பறந்து போகும் 

அடுத்து கொஞ்சம் கிராம்புப் பொடியை உள்ளங்கையில் கொட்டி கொண்டு அதை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் 
 
இன்னொரு முன்னெச்சரிக்கை வழியுண்டு ,அது தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் பாதாம் பருப்பை சாப்பிட்டால் .வரும் முன்னே காக்கலாம் .