பழங்கள் சாப்பிடுற பழக்கம் உள்ளவங்க இதை வழக்கமா செய்யலேன்னா சாப்பிடுவதே வேஸ்ட் .

 
fruits

பொதுவாக நமது சிறு வயது முதல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று பலர் கூறுவதை நாம் கேள்வி பட்டிருப்போம்.

அது உண்மை தான். ஒரு நாளைக்கு இரண்டு வேளைகளில் பழங்களை சாப்பிடுவதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அது மட்டும் இல்லாமல் நாம் பழங்களை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Fruits intake, Time to eat fruits, health tips, weight loss tips, healthy life, Healthy fruits

ஆனால் நாம் சாப்பிடும் பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சரி வாங்க எந்த நேரத்தில் பழங்களை சாப்பிட வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..

மாலையில் பழங்கள் சாப்பிடுவது தூக்கம் மற்றும் செரிமான செயல்முறையை சீர்குலைக்கும் பெரும்பாலான பழங்கள் எளிய கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் அவை இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன. எனவே,கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவது சிறந்தது. பழத்தையும் உணவோடு சேர்க்க வேண்டும் அல்லது சாப்பிட்ட உடனேயே எடுக்க வேண்டும். ஒரு பழம் சாப்பிடுவதற்கு முன் உணவுக்குப் பிறகு குறைந்தது 3.5 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

எளிய கார்போஹைட்ரேட்டுகளை காலை மற்றும் உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உட்கொள்வது நல்லது. கொழுப்பு, புரதம் மற்றும் குறைந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உடைய பழத்தை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உட்கொள்வது நல்லது.

பழங்களை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?
உணவு சாப்பிட்ட பின் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த பழங்கள் உணவை நொதிக்க செய்யும் என்பதால், பழங்களை எப்போதும் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்காது. அல்லது சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிடலாம்.

காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்த பின் பழங்களை சாப்பிடலாம். காலை வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். அத்துடன் உடல் எடை குறைத்து, உடல் ஆரோக்கியம் பெறும். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் மற்றும் மாலை வேளையில் சாப்பிடலாம். மதிய உணவிற்கு முன் பழங்கள் சாப்பிடுவதால் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
ஒரு தட்டு நிறைய பழத்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்வதாக இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து சுவைக்கலாம். இடை உணவாக, காலை 11 மணி… மாலை 4-5 மணி அளவில் ருசிக்கலாம்.

சர்க்கரை நிறைந்த பழங்கள் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்பதால் தூங்க போகும்முன் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அல்லது 2,3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்


காலையில் பழங்கள்: `இரவு சாப்பிட்டதும் சில வாழைப் பழங்களை வாயில போட்டாதான், அடுத்த நாள் மலம் முறையாக வரும்’ என்று சொல்பவர்கள் பலர். ஆனால் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதுதான் முறை. மூன்று வேளை உணவுகளின் செரிமானத்துக்கு இடையூறு செய்யாமல், பழங்களை மென்று சாப்பிட்டாலே, அதிலுள்ள நார்ச்சத்து மலத்தை எளிமையாக்கும். ஒரு வேளை உணவைப் பழங்களாகவே எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தால், உங்கள் தேர்வு காலை வேளையாக இருக்கட்டும்.

பழங்கள் எப்போதும் தனியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். பால் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து எடுக்க கூடாது. அவ்வாறு எடுத்துக்கொள்வது உடலில் நச்சுகள் உருவாக வழிவகுக்கும். பழங்களின் முறையற்ற செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சீர்குலைக்கும்.