தினமும் இந்த பழம் சாப்பிடுவதால் 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைய வாய்ப்புள்ளது .
பொதுவாக பழ ஜூஸ் குடிப்பது நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .அதிலும் சில வகை பழங்கள் மருத்துவ சிகிச்சையில் கூட பயன் படும் .அந்த வகையில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.100 கிராம் எடையுள்ள ஒரு ஆரஞ்சுப் பழத்தில் 53.2 மில்லி கிராம் வைட்டமின் சி இருப்பதால் இது நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்க கூடியது .
2.மேலும் இந்த ஆரஞ்சு பழம் ஆக்ஸிஜனேற்ற தடுப்புப் பண்பு (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) கொண்டது.
3.நம் உடலில் நிலையற்ற அணுக்களின் (ஃப்ரீ ராடிகல்ஸ்)செயல்பாட்டால் உடல் செல்கள் சேதமடைவதை இந்த ஆரஞ்சு பழம் தடுக்கிறது.
4.சிலருக்கு சளி இருந்து கொண்டேயிருக்கும் .இந்த சளி மற்றும் பல்வேறு ஒவ்வாமை (அலர்ஜி)தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு ஆரஞ்சு நல்லது.
5.சிலருக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும் .இந்த மன அழுத்தத்திற்குரிய ஹார்மோன்களை மட்டுப்படுத்தக்கூடிய கொலேஜன் சுரப்பை இது ஊக்குவிக்கிறது
6.மேலும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
7.தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைய வாய்ப்புள்ளது .
8.மேலும் இந்த ஆரஞ்சு பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
9.மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்


