தட்டு நிறைய வயிறு முட்ட இரவுல இந்த உணவுகளை சாப்பிடுவது ,தற்கொலைக்கு சமமாம் .

 
Fast Food

பொதுவாக இரவில் தூங்குவதற்கு முன் முடிந்த வரை கம்மியாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது உண்டு.

ஆனால் நம்மில் பலர் காலை முதல் பரபரப்பாக இருந்து விட்டு இரவில் மட்டும் நிதானமாக இருக்க சிறிது நேரம் கிடைப்பதால் நாம் அப்போது மட்டும் வயிறு நிறைய திருப்பதியாக சாப்பிட்டு விடுகிறோம்.

நாள் முழுவதும் கடுமையாக உழைத்து, மிகவும் சோர்வாக வீட்டிற்கு வந்து, இரவில் படுக்க நினைத்தால் உங்களால் தூங்க முடியவில்லையா? இதற்கு மன அழுதத்ம், மன இறுக்கம் மற்றும் இதர தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகள் கூட காரணமாக இருக்கலாம். ஒருவருக்கு நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டியது மிகவும் முக்கியம். நல்ல தூக்கத்தை மேற்கொண்டால், குறிப்பிட்ட சில நோய்த் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.


அதோடு நல்ல நிம்மதியான தூக்கமானது மூளையை ஆரோக்கியமாகவும், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்யும். ஆனால் சில உணவுகள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

இரவில் பரோட்டா, பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடுகிறோம். இப்படி இரவில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..

Foods For Bone Strength

இறைச்சியும், பிரியாணியில் உள்ள சுவையூட்டும் எண்ணெய் பொருட்கள் செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடும். நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும்.

சில ஓட்டல்களில் பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. இவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. அதனால் நள்ளிரவில், இதுபோன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரியாணி மட்டுமின்றி நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், இறைச்சி போன்றவை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரத்தில் பிரியாணி போன்ற உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் அது சரியாக ஜீரணம் ஆகாமல் போய்விடுகிறது. இதனால் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கிறது. இதனால் குடல் அலர்ஜி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதால் அது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் இரவில் ஹெவியான உணவுகளை சாப்பிடாமல், இட்லி தோசை போன்ற மிதமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.

லெட்யூஸ் என்னும் கீரை அனைத்து வகையான சாலட்டுகளிலும் சேர்க்க ஏற்றது. லெட்யூஸ் கீரையில் லேக்டுகேரியம் என்னும் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளது. இந்த கீரையை இரவு நேரத்தில் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் 
ஓட்ஸ் மிகச்சிறந்த காலை உணவு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஓட்ஸை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள மெலடோனின், விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறத் தூண்டும். வேண்டுமானால், இன்று முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரிய வரும். முழு தானியங்கள் ஒருவருக்கு இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் உணவுகளுள் முழு தானிய உணவுகளும் ஒன்று. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவி, எளிதில் விரைவில் தூங்க உதவியாக இருக்கும். எனவே இரவு தூங்கும் முன் முழு தானிய பிரட்டை சாப்பிடுங்கள். இதன் விளைவாக இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.