உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடனே செய்ய வேண்டியவை
பொதுவாக பலர் நள்ளிரவில் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்கின்றனர் .அதனால் எடை கூடுவதை தவிர்க்க இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உண்பதை தவிர்க்கலாம் .எப்படி உணவு மூலம் எடை குறைக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.காலை உணவை தவிர்த்தல் எடை குறையும் என்று பலர் தப்பு கணக்கு போடுகின்றனர் .இது முற்றிலும் தவறான ஒன்று .
2.மேலும் அதிகமாக தண்ணீர் குடித்து வர வேண்டும் .மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம் .
3.காய் கறி சூப் குடியுங்கள் .அடுத்து தானிய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளவும் .மேலும் சில குறிப்புகளை படியுங்கள்
4. தினமும் 1 மணி நேரம் தசைகள் வலுப்பெற செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் போதும்.
5.இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்க செல்லுங்கள்.
6. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டு, சுண்டல், பழங்களையும் நொறுக்கு தீனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.