சர்க்கரை நோயாளிகள் எந்த உணவுகளை ஒதுக்கணும் தெரியுமா ?

 
sugar sugar

பொதுவாக ஒருவருக்கு சுகர் வந்துவிட்டால் அவருக்கு என்று தனியாக ஒரு உணவுப்பட்டியலை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும் .அப்போதுதான் அவரின் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும் .இந்த சுகர் பேஷன்டின் உணவு பட்டியல் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அரிசி உணவுகள் சுகரை அதிகப்படுத்தி விடும் 
2.சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசி, மட்டை அரிசி, கைக்குத்தல் அரிசி போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம். 
3.சர்க்கரை நோயாளிகள் பாலில் காய்ச்சப்பட்ட கஞ்சிகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.பால் சுகர் அளவை உயர்த்தும்  
4.சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களை தனியாக வேக வைத்து சாப்பிடலாம். 
5.சர்க்கரை நோயாளிகள், ஓட்ஸ் மற்றும் சிறுதானியங்களை பாலில் கலந்து குடித்தால், அவை ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி விடும்.
6.சர்க்கரை நோயாளிகள் வெளியே செல்லும்போது பழச்சாறு எடுத்துக் கொள்வார்கள். இதை தவிர்த்து விடுவது நல்லது. 
7.சர்க்கரை நோயாளிகள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பழஜூஸ்கள் எடுத்து கொண்டால்  ரத்த சர்க்கரை அளவை உயர்த்திடும். 
8.சர்க்கரை நோயாளிகள் எண்ணெய்யால் பொரித்த உணவுகளான வடை, சமோசா, பக்கோடா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
9.சர்க்கரை நோயாளிகள் பரோட்டா, பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. 10.மைதாவில் அதிகளவிலான கார்ப்போ ஹைட்ரேட் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை அதிகரித்து விடும்