வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிட்டா ,ஆபீசுக்கு போகாம ஆஸ்பத்திரிக்கு போக நேரலாம்

 
curd

காலையில் எழுந்ததும் டீ, காபி பருகும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ளகாபின்வயிற்று உபாதைகள் தோன்ற வழிவகுத்துவிடும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். அதனால் காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

* வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.

* வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

* பொதுவாகவே வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். தேவையற்ற உடல் உபாதைகள் உண்டாக காரணமாகிவிடும். டாக்டர் பரிந்துரைத்தால் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடலாம்.

* வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.

* எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விடும். செரிமான கோளாறுகளும் உண்டாகக்கூடும்.

* குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருகக்கூடாது. அது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும். அதன் காரணமாக உணவு செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். குளிர்பானங்களை ஒருபோதும் பருகாமல் இருப்பது நல்லது.

* காலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும்.

அதிகாலை நேரத்தில் எப்போதும் சிலருக்கு எழுந்த உடனேயே பசி எடுக்கும். எனவே அவர்கள் காலையில் சமையல் அறையிலோ அல்லது டைனிங் டேபிளிலோ எந்த உணவை முதலில் பார்க்கிறார்களோ அந்த உணவை உண்ண நினைப்பார்கள். அதை சாப்பிட்டு அவர்கள் தங்கள் காலை உணவை முடித்துக்கொள்வார்கள். சில வீடுகள் பஃப்ஸ் போன்ற பேக்கரி உணவுகள் இருப்பதுண்டு. சமைப்பதற்கு தாமதம் ஆகும் என்பதால் இதை காலை உணவாக சிலர் பயன்படுத்துகின்றனர். இது உங்கள் வயிறை முழுமையாக உணர வைக்கும் ஆனால் இது சிறந்த உணவு அல்ல, இதில் அதிகமாக ஈஸ்ட் உள்ளது. அது உங்கள் வயிற்று புறணியில் எரிச்சலை ஏற்படுத்தும்.

​காரமான உணவுகள்

இந்திய மசாலாக்கள் நமது உணவின் சுவையை எளிதாக அதிகரிக்க உதவுகிறது. ஆனால் காரமான உணவுகளை வெறும் வயிற்றில் உண்பது நல்லது அல்ல. ஏனெனில் அவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன, இவை வயிற்றில் அமிலத்தன்மையில் எதிர்மறையாக செயல்படும். இவை கடினமான வாசனை மற்றும் சுவையை கொண்டிருப்பதால் வயிற்றில் அஜீரணத்தை ஏற்படுத்தும். எனவே வெறும் வயிற்றில் இருக்கும்போது மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி போன்ற காரமான உணவுகளை உண்ண வேண்டாம்.

​இனிப்புகள்

சர்க்கரை எளிதாக ஜீரணிக்க கூடிய ஒரு உணவாகும். ஆனால் வெறும் வயிற்றில் அதை சாப்பிடும்போது உங்கள் இரத்தத்தில் தேவையான அளவில் இன்சுலின் உருவாவதை இது தடுக்கிறது. இதனால் உங்களுக்கு கண்கள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இது மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும். இனிப்புகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் மற்றும் காரங்களின் சமநிலையை சீர்க்குலைக்கின்றன. எனவே உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயம் இருந்தால், வெறும் வயிற்றில் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கவும்.

​பேரிக்காய்


பேரிக்காயில் அதிக அளவு கச்சா நார்ச்சத்து உள்ளது. ஆனால் நீங்கள் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அது மென்மையான சளி சவ்வுகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது உங்கள் வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்துகிறது. ஓட்ஸ் அல்லது பிறந்த தானியங்களை காலை உணவாக சாப்பிட்டுவிட்டு பிறகு நீங்கள் பேரிக்காயை உண்ணலாம்.

* பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

* பப்பாளி பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் , வைட்டமின் சி போன்றவை இருக்கின்றன. அதனை காலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு துணை புரியும்.