முப்பது வயசில் கல்யாணம் செய்து கொள்ளும் மாடர்ன் மங்கையரே !உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி

 
marriage

பெண்களின் திருமணத்தைப் பொருத்தவரை வருகின்றவன் கைநிறைய சம்பாதிக்க கூடியவராக இருக்கிறாரா நன்றாக படித்திருக்கிறாரா அமெரிக்கா வாழ்க்கை இருக்கிறதா கிரீன் கார்டு வைத்துள்ளாரா ? என்பது போன்ற கேள்விகளுக்கு சாதகமான பதில்கள் வந்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். மேலும் பெண்களும் பல பட்டப் படிப்புகளை படிக்க நேர்வதால் காலதாமதம் என்பது தவிர்க்க இயலாத ஒரு விஷயமாக போய்விட்டது. திருமணம் என்ற வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வை கடைசியில் கொண்டு போய் போட்டு விட்டார்கள். அதனால்தான் வீடு கட்டி விட்டு வாகனம் வாங்கி விட்டு வெளிநாடு சென்று விட்டு சொத்து வாங்கிவிட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிடுகின்றனர். இவை அனைத்தையும் தாண்டி கடைசி முயற்சியாக திருமணம் என்ற இடத்திற்கு வந்து ஜாதகத்தை எடுக்கும் பொழுது உங்களுக்கு ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் உள்ளதால் இன்னும் திருமணம் தாமதமாகும் என்ற தகவலை கேட்கும் பொழுது மனம் உடைந்து விடுகிறது. வாழ்கையின் ஒரு பாதி தனிமையிலே வாழ்ந்து ஆகிவிட்டது என்ற சலிப்பு தன்மையும் வந்துவிடுகிறது...

இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத்தகுதிகளோடு இருக்கின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.

இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க, 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை. முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு.

30 வயதில், குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். இயல்பாகவே, 40 முதல் 45 வயதிற்குள், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும், வலிமை குறைவாக தான் இருக்கும். அதேநேரம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைந்து விடும். அதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு என்பது மிகவும் சிரமம்.

45 வயதிற்கு மேல், மிக சில பெண்களுக்கு மட்டுமே, குழந்தைப்பேறு வாய்க்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இதனால், குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது