பீர் குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்

 
liquor

பொதுவாக ஒரு பார்ட்டி அல்லது கல்யாண வீடு அல்லது ஆபீஸ் பார்ட்டி என்றால் பெரும்பாலானோரின் முதல் தேர்வு பீர் குடிப்பதுதான் .இதற்கு என்ன காரணமென்றால் அதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதும் ,மேலும் உடலுக்கு கெடுதல் விளைவிக்காது என்ற நம்பிக்கையும் தான் காரணம் .ஆனால் பீரையும் அளவுக்கதிகமாக குடித்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் .பீரில் ஆல்கஹால் குறைவாக இருந்தாலும் கலோரிகள் அதிகமாக இருக்கிறது .இதில் 150 கலோரிகள் இருக்கின்றன .ஆல்கஹாலில் இருக்கும் கலோரிகள் நம் அடி வயிற்றில் தங்கி கொழுப்பை உற்பத்தி செய்கின்றது .அதிக பீர் குடிப்பது  இது இதய தசைகளுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும் .

bear

அதிக பீர் ஏற்படுத்தும் ஆபத்துகளில் சில இவை...

தொடர்ந்து நிறைய பீர் குடிப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவதை கவனித்திருக்கலாம். . பீரில் உள்ள ஆல்கஹால்  உங்களுக்கு பசியை உருவாக்கி அதிக உணவை உட்கொள்ள வைக்கும். இது எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும்

சிலர் அதிகப்படியான பீர் குடிப்பது வழக்கம் .இப்டி குடிப்பவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு  நீரிழிவு நோய் விரைவில் உண்டாகும்

சில நேரங்களில் அதிக பீர் குடிப்பது  பக்கவாதம் அல்லது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.  . எனவே, ஆல்கஹால் அதிகம் உள்ள மதுபானத்தை குடிக்காவிட்டாலும், அதிக அளவில் பீர் குடிப்பது ஆரோக்கியத்தில் அதே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்