கொஞ்சம் தூறல் போட்டாலே தொடர்ச்சியா தும்மல் போடுறவங்களின் துயர் நீக்கும் வழி

 
thummal

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிரின் தாக்கத்தால் நம்மில் பலர் சளியினால் அவதிப்படுவதுண்டு. சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட  சில வீட்டு வைத்தியக் குறிப்புகள் உங்களுக்காக...

பொதுவாக தும்மல் தொடர்ச்சியாக வரும் போது, நாம் உடல்நலம் சரியில்லை என்று நினைத்து, உடனே ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்போம். ஆனால் இப்படி வெறும் ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்பதால் மட்டும் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியாது. அதோடு ஆன்டி-பயாடிக் மருந்துகளை அதிகம் எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதும் அல்ல.

சரி, தும்மல் பிரச்சனையில் இருந்து இயற்கையாக விடுபட முடியுமா? நிச்சயம் முடியும். 

 

சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட  சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்:

துளசி மற்றும் மிளகு: ஒரு கை பிடி துளசி இலைகளை 10 கருப்பு மிளகுடன் நன்றாக அரைத்து ஒரு நாளைக்கு மூன்றுமுறை சாப்பிடவும்.

ஸ்பானிஷ் தைம் மற்றும் மிளகு: 7 ஸ்பானிஷ் தைம் இலைகளை 10 கருப்பு மிளகுடன் ஒன்றாக சேர்த்து அறைத்து, ஒரு நாளைக்கு 3 முறை உட்கொள்ளுங்கள். “நாட்டுபுற இலை அல்லது மூலிகைகளின் ராணிஎன்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் தைம், இந்தியாவில் கற்பூரவல்லி இலை(தமிழ்) என்று கூறுவதுண்டு.

இஞ்சி சாறு: முக்கால் கப் தண்ணீரில், 4 தேக்கரண்டி இஞ்சிசாறு, 4 தேக்கரண்டி தேன், 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும்.

ஆவி பிடிப்பது
மூக்கில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் எளிய வழிகளுள் ஒன்று ஆவி பிடிப்பது. எனவே ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் நீரை நிரப்பி, துணியால் தலையைமூடி 15-20 நிமிடம் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஆவி பிடியுங்கள். இதனால் தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தும்மலை இயற்கை வழியில் எப்படி தடுப்பது?

புதினா எண்ணெய்
தும்மல் பிரச்சனைக்கு புதினா எண்ணெய் நல்ல நிவாரணத்தை வழங்கும். புதினா எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், தும்மலை உண்டாக்கும் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கும். அதற்கு சூடான நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, அந்த நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், தொடர்ச்சியாக வரும் தும்மலைத் தடுக்கலாம்.

உப்பு
உப்பைக் கொண்டும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். உப்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள தொற்றுக்களை நீக்கி, தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4-5 முறை கொப்பளியுங்கள்.

தேன்
தும்மல் பிரச்சனையில் இருந்து தேன் நல்ல நிவாரணத்தை வழங்கலாம். முக்கியமாக குழந்தைகள் தும்மல் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், அவர்களுக்கு தேன் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். அதற்கு 1 ஸ்பூன் தேனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால், தும்மல் பிரச்சனை நீங்கும்.

மற்றொரு வழி, எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடிப்பது. இதனால் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, மூக்கில் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிக்க உதவும்.

பூண்டு
பல வருடங்களாக, சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு 2-3 பல் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் 2 கப் நீரை நன்கு சூடேற்றி, அதில் பூண்டை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி குளிர வைத்து குடித்தால், தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.