இப்ப குழந்தை வேணாம்னு நினைக்கிறவங்க ,எப்ப பெத்துக்கலாம்னு இதை படிங்க

 
family

தற்போது உள்ள நவீன உலகில் திருமணமான ஏராளமான ஜோடிகள், நாம் நன்றாக செட் ஆகிவிட்டு, அதன் பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டம் போடுவர்.

ஆனால், அவர்கள் நினைக்கும் போது சிலருக்கு மட்டுமே நடக்குமே தவிர, பலருக்கு நடப்பதில்லை.

இதனால் நமக்கு எப்போது குழந்தை பிறக்கும், கருத்தரிக்க எது சிறந்த வயது, எத்தனை குழந்தைகள் போன்ற விபரங்களை Erasmus University Medical Center-ன் ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு கடந்த  ஆண்டு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், 10,000 ஜோடிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வயதிற்கேற்ப கர்ப்பம் தரிப்பது, குறைவது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஏற்ற வயது போன்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.

தம்பதிகள் எத்தனை குழந்தைகளைப் பெற விரும்புகிறார்கள் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் எப்போது குழந்தைகளுக்காக முயற்சிக்க வேண்டும் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை

நீங்களும், உங்கள் துணைவியும் ஒரு குழந்தையை மட்டும் போதும் என்று விரும்பினால், அதற்கு 41 வயது வரை காத்திருக்கலாம்.

இதில் 50 சதவீதம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. அதுவே 37 வயது என்றால் 75 சதவீத வாய்ப்பும், 32 என்றால் 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

 

இதுவே நீங்கள் IVF சிகிச்சை முறையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால், 42 வயது வரை காத்திருக்கலாம். அதிலும் 42 வயது என்றால் 50 சதவீத வாய்ப்பும், 39 வயது என்றால் 75 சதவீத வாய்ப்பும், 35 வயது இதற்கு சிறந்த வயது என்று கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகள்

இரண்டு குழந்தைகள் என்றால் அதற்கு 27 வயது சரியான வயது. இதில் முயற்சியை துவங்கினான் 90 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இது 34 வயதில் 75 சதவீத வாய்ப்பாகவும், 38 வயதை அடையும் போது 50 சதவீத வாய்ப்பாகவும் குறைகிறது.

IVF மூலம், நீங்கள் 31 வயதில் கருத்தரிக்கத் தொடங்கினால் இரண்டு குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவீதமும், 35 வயதில் 75 சதவீதமும், 39 வயதிற்குள் 50 சதவீத வாய்ப்பும் இருக்கும்.

மூன்று குழந்தைகள்

இயற்கையாக மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் 23 வயது சரியான வயது, இந்த வயதில் 90 சதவீதம் வாய்ப்புள்ளது.

அதுவே, 31 வயதை தொடும் போது இது 75 சதவீதமாகவும், 35 வயதை தொடும் போது 50 சதவீதம் மட்டுமே சாத்தியம்.

இதில் மூன்று குழந்தைகளை IVF மூலம் பெற விரும்பினால், அதற்கு உகந்த வயது 28 இதில் 90 சதவீதமும், 33 வயதில் 75 சதவீதமும், 36 வயதில் 50 சதவீதமுமாக உள்ளது.

அனைத்து வகைகளிலும், IVF என்பது ஒரு பெண்ணுக்கு பிற்காலத்தில் குழந்தைகளைப் பெறுவதற்கான அதிக வாய்ப்பைக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பேறுக்கு தயாராகும் தம்பதியர்கள் அதற்கு முன்பு தங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அதில் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டுமாவது கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் கருத்தரிப்பு தாமதாமாகாமல் விரைவில் கிட்டும். பொதுவாக பெண்கள் மட்டும் தான் விரைவான கருத்தரித்தலுக்கு தயாராக வேண்டும் என்னும் எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் கருத்தரிப்பில் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தயார்படுத்திகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

திருமணம் முடிந்து சிலமாதங்கள் அல்லது சில வருடங்கள் குழந்தைபேறை தள்ளி போடு வது அதிகரித்துவருகிறது. பல தம்பதியரும் முறையாக மருத்துவருடன் கலந்தாலோ சித்து குழந்தைபேறை தள்ளிபோடுகிறார்கள். சிலர் சுயமாக சில கட்டுப்பாடுகளை பின்பற்றியும் கருத்தரித்தலை தள்ளி போடுகிறார்கள். அப்படி இருக்கும் போது கருத்தரித்தலை தள்ளிபோடும் கருத்தடை சாதனங்களை முன்கூட்டியே தவிர்க்க திட்டமிடுங்கள்.

கருத்தடை மாத்திரைகளாக இருந்தால் அதை சுழற்சி முறையில் உட்கொண்ட பிறகு நிறுத்திவிடுங்கள். இந்த மாத்திரையை 21 அல்லது 28 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்தால் தான் சுழற்சி பூர்த்தியாகும். கருத்தரிக்க வேண்டும் என்று விரும்பும் போது நீங்கள் மாத்திரை உபயோகிக்கும் போது மாதவிடாய் காலம் வரும் வரை எடுத்து கொண்டு அதன் பிறகு அந்த மாத்திரையை நிறுத்த வேண்டும்.

இதையும் சுயமாக நீங்களாக முடிவெடுக்காமல் மருத்துவர் ஆலோசனையோடு நிறுத்திவிடுங்கள். உடனடியாக கருத்தரிக்க வேண்டும் என்று உடனடியாக மாத்திரை நிறுத்தினால் பலன் தராது ஏனெனில் இந்த மாத்திரைகள் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தகூடியவை என்பதால் முறையாக நிறுத்துவது பலன் தரும். ஆண்கள் ஆணுறை பயன்படுத்தும் போதும், கருத்தடை ஊசிகளுக்கும் கூட மருத்துவரை அணு குவது நல்லது.

​மருத்துவ பரிசோதனை


திருமணம் முடிந்ததும் தம்பதியர் செய்ய வேண்டிய முதல் வேலை மருத்துவர்களை அணுகுவது தான். தம்பதியர் இருவருமே தங்களை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் தைராய்டு, ஹைப்பர், ஹைப்போ தைராய்டு, கருப்பை நீர்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து குறையிருந்தால் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை, விறைப்புதன்மை பிரச்சனை போன்றவை இருக்கிறதா சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் கலந்து ஆலோசிக்கவும்.


இருவருக்கும் சிகிச்சை தேவையில்லை ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்னும் போது கருத்தரிப்பு விரைவாக இருக்கும். இருவரில் ஒருவருக்கு சிகிச்சை தேவைப்பட்டாலும் முன்கூட்டியே நீங்கள் அணுகுவதால் சிகிச்சை விரைவில் பலனளிக்கும்.

​தீவிரமான உடற்பயிற்சி வேண்டாம்


பெண்கள் உடல் நலனில் அதிக விழிப்புணர்வை கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும் போது அவை உடலில் இரத்த ஒட்டத்தை சீராக்கும். உடல் உறுப்புகளை வலி மையாக வைத்திருக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஆனால் தீவிரமான உடற்பயிற்சியால் அதிக தூரம் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ் எக்ஸர்சைஸ் வகைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் குழப்பத்தை உண்டு செய்யும் இதனால் கருத்தரித்தல் தள்ளி போகும் வாப்பு உண்டு.

அதனால் குழந்தைபேறுக்கு தயாராகும் போது பெண்கள் அதிக நேரம் செய்ய கூடிய உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். உங்கள் உடலுக்கு ஓவ்வாத பயிற்சிகளை செய் வதை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை நடைபயிற்சி போன்று மேற்கொள்ளலாம். இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.