தர்பூசணி பழத்தில் அடங்கியுள்ள ஆரோக்கியம் என்ன தெரியுமா ?
பொதுவாக பழங்கள் நமக்கு இயற்கை கொடுத்த வரங்கள் என்று கூறலாம் ,அந்த வகையில் தர்பூசணி பழம் நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் .நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.மேலும் இந்த பழத்தின் அருமை பெருமைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.ஆரோக்கியம் மிகுந்த தர்பூசணி பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் காணப்படுகிறது.
2.மூளைக்கு செரோடோனின் மற்றும் டோபோமைன் தேவை .அதனால் தர்பூசணி இந்த வேதிப்பொருள்கள் உடலில் உற்பத்தியாக உதவுகின்றன.
3.இந்த செரோட்டன் மற்றும் டோபமைன் சாதாரண ஒலி அதிர்வுகள் மற்றும் தொல்லைகளை மூளை புறக்கணிக்க உதவுகின்றன.
4. நம்மை எப்போதும் உற்சாகமாக, அமைதியாக இருக்க உதவுகின்றன .
5.ஆகவே, உறக்கமின்மை என்ற இன்சோம்னியாவால் அவதிப்படுவோருக்கு தர்பூசணி நிவாரணம் அளிக்கும்.
6. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் தர்பூசணியில் காணப்படுகின்றன.
7.அதனால் தர்பூசணியில் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.
8.மேலும் தர்பூசணி உடலில் போதுமான அளவு கால்சியம் தங்கவும் உதவுகிறது.
9.வியர்வையால் ஏற்படும் நீரிழப்பை சமன் செய்யவும் தர்பூசணியிலுள்ள தாதுகள் உதவுகின்றன.
10. தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவையும் உள்ளதால் இம்மியூனிட்டி அதிகரிக்கும்
11.தர்பூசணி குறைந்த கலோரி கொண்டது. ஆகவே, தர்பூசணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. 12.தர்பூசணியிலுள்ள வைட்டமின் சி, காயங்கள் விரைவாக ஆறுவதற்கு உதவுகிறது..


