வாழைத்தண்டு சூப் குடித்து வந்தால் என்னநோயை விரட்டலாம் தெரியுமா ?

 
vazhaithandu vazhaithandu

பொதுவாக வாழைத்தண்டு நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது .இந்த வாழைத்தண்டு நம் உடலில் கிட்னியில் உண்டாகும் கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது .அது மட்டுமல்லாமல் இந்த சூப் உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது . 
உடல் எடையை குறைக்கவும் ,ஆரோக்கியமாய் வாழவும்  வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம் -
1.ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு வைத்து விடவும் .
2.பின்னர் அந்த வாழைத்தண்டை  தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். 
3.அதன் பின்னர், சீரகம், மிளகு, தனியா இதை தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும் 
4.அதன் பின்னர் வாழைத்தண்டை மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
5.பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வைக்கவும் 
6.அந்த வாணலியில் வெங்காயம், தக்காளி , மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும் 
7. அதையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
8.பின்னர் வாழைத்தண்டு பாதி வெந்த பிறகு, அதில், அரைத்து வைத்த விழுது, சீரகம், மிளகு, தனியா பொடியை போட்டு வைத்து விடவும்  
8.அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான வாழைத்தண்டு சூப் தயாராகி விட்டது .
9.வாரத்திற்கு 3 முறை இந்த வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்  
10.மேலும் இந்த வாழைத்தண்டு சூப் மூலம் உங்கள் உடல் எடை கிடுகிடுவென குறைய ஆரம்பிக்கும்.