குமட்டிக்காயை அரைத்து தேய்த்து வந்தால் என்னாகும் தெரியுமா ?

 
sottai sottai

பொதுவாக இன்றைய நாகரீக உலகில் தவறான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து விடுகிறது .இந்த சொட்டை பிரச்சினைக்கு பலர் மாத்திரை மருந்து வாங்கி சாப்பிடுவதுண்டு .ஆனால் இயற்கையிலேயே கிடைக்கும் குமட்டி காய் இந்த சொட்டை பிரச்சினையை தீர்த்து வைக்கும் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1. சித்தர்கள் சொன்ன ரகசியக் காயான குமட்டிக் காய் மூலம்  சொட்டைத் தலையில் கூட முடி செழித்து வளர வைக்கலாம் 
2.குமட்டிக்காய் பார்ப்பதற்கு தர்பூசணிப்போல், பச்சை நிறத்தில், வெள்ளை  மற்றும் மஞ்சள் நிற கோட்டில் சின்ன உருண்டை வடிவில் அழகாக இருக்கும்
3.இந்த  குமட்டிக்காய் பூச்சி விரட்டியாகவும், மனித உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் கொண்டது 
4.சிலர்  உடம்பில் கொப்புளங்கள் உண்டாகும் .இப்படி வந்தால் இக்காயை அரைத்து தடவினால் சரியாகிவிடும்.
5.தலைமுடி உதிர்ந்தாலோ, வழுக்கை விழுந்தாலோ இந்தக் குமட்டிக்காயை அரைத்து வழுக்கை விழுந்த இடங்களில் தேய்த்து வந்தால் முடி வளரும் . 
6.இந்த காயை  வாரத்திற்கு 3 முறை தேய்த்து  வந்தால் நிச்சயம்முடி வளரும் 
7.மேலும், பொடுகு தொல்லையைபோக்க இந்தக் குமட்டிக்காயை அரைத்து, தலையில் மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். முடி வளர எப்படி பயன் படுத்தலாம் என்று பார்க்கலாம் 
8.முதலில் ஒரு பாத்திரத்தில் தேய்காய் எண்ணெய்யை மிதமான தீயில் சூடுப்படுத்த வேண்டும் , 
9.அடுத்து அந்த தேங்காய் எண்ணெயில்  அரைத்த குமட்டிக்காயை போட்டு, நன்றாக கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
10.இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்து வந்தால் நிச்சயம் வழுக்கை தலையில் காடு போல முடி வளரும்.