இந்த மூலிகை தேனீர் எத்தனை நோய்களை முறிக்கும் தெரியுமா ?
பொதுவாக நம் உடலில் நாம் சுவாசிக்க இதயத்திற்கு இணையாக இருக்கும் ஓர் உறுப்பு நுரையீரல் .இந்த நுரையீரல் கெட்டு விட்டாலோ அல்லது நிமோனியா போன்ற நோய்கள் தாக்கினாலோ நிறைய பாதிப்படையும் .இந்த நுரையீரல் கெடாமல் பாதுகாக்க ஒரு மூலிகை தேனீர் தயாரித்து தினம் குடித்து வரலாம்
1.நுரையீரலுக்கு சுகம் தரும் மூலிகை டீ ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் .
2.முதலில் சிறிதளவு இஞ்சி, 1 தேக்கரண்டி சுக்குப் பொடி எடுத்து வைத்து கொள்ளவும்
3.அடுத்து இலவங்கபட்டை அல்லது பட்டை தூள்,கொஞ்சம் எடுத்து கொள்வோம்
4.அதனுடன் துளசி இலைகள் , கற்பூரவல்லி இலையை உலர்த்தி பொடித்த பொடி - 1 தேக்கரண்டிஎடுத்து கொள்வோம் ,
5.அதனுடன் 3 மிளகு, 2 ஏலக்காய் (நசுக்கியது), கால் தேக்கரண்டி அளவு வெந்தயம் எடுத்து கொள்வோம் ,
6.அதனுடன் ஓமம் ஒரு சிட்டிகை, சிறிதளவு சீரகம், 2 கிராம்பு எடுத்து கொள்வோம் .இப்போது மூலிகை டீ எப்படி செய்வது என்று பாக்கலாம்
7.முதலில் மேலே கூறிய அனைத்து பொருளையும் இரண்டு கப் அளவு தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கவும்,
8.அந்த கலவை 10 நிமிடம் கொதித்த பின்னர் ஜூவாலையை மிதமாக வைக்கவும்
9.பின் அந்த மூலிகை கலவையை வடிகட்டி அருந்தவும்.
10.அந்த மூலிகை டீ அருந்துவதற்கு நெடி வீசுவதுபோல் உணர்ந்தால் சிறிதளவு தேன் அல்லது வெல்லம் சேர்த்துக்கொண்டால் நெடி வீசாது


