தினமும் நாக்கை சுத்தம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

 
cleaning your tongue

வாய் துர்நாற்றம் வீசுவது மிகவும் அசௌகரியமான விஷயமாகும். பற்கள், ஈறுகள், நாக்கு என வாயின் ஆரோக்கியத்தைக் காப்பது மிகவும் முக்கியமானது. பற்களை நன்கு தேய்த்துக் கழுவும் பலரும் சுத்தம் செய்ய மறப்பது நாக்குகளை. சிலர் நாக்கின் சுவை அரும்புகள் அழியும் அளவுக்கு கம்பி வைத்துத் தேய்ப்பார்கள். சிலரோ அதை சுத்தம் செய்வது தேவையற்ற ஒன்று என்று கருதி விட்டுவிடுகின்றனர்.

இரவு முழுவதும் நம்முடைய நாக்கில் பாக்டீரியா வளர்ச்சி இருக்கும். பாக்டீரியா வளர்ச்சி அடையும் அது கந்தகத்தை உருவாக்குகிறது. பற்களின் எனாமலை சிதைக்க கந்தகத்தைப் பாக்டீரியா உருவாக்குகிறது. இதுவே வாய் துர்நாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் இந்த நச்சு அகற்றப்படுகிறது.

பாக்டீரியா, பூஞ்சை, நச்சுக்கள் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்க தினமும் பிரஷ் செய்யும் போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்வது நாக்கு மற்றும் வாயை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

நாக்கை சுத்தம் செய்வது செரிமான மண்டலத்தை காக்கும். செரிமான மண்டலம் என்பது வயிறு, இரைப்பை மட்டுமல்ல... அது நம்முடைய வாய்ப்பகுதியில் தொடங்குகிறது. நம்முடைய உமிழ்நீரில் இருக்கும் என்சைம் உணவைச் சிதைத்து ஊட்டச்சத்து கிரகிக்க உதவுகிறது. நாக்கை சுத்தம் செய்வது உணவு உட்கொள்ளும்போது உமிழ் நீர் சுரப்பைத் தூண்டுகிறது.

இரவு முழுவதும் நம்முடைய நாக்கில் பாக்டீரியா வளர்ச்சி இருக்கும். மேலும் உணவு துணுக்குகள் இருக்கும் என்பதால் நச்சுத் தன்மையாக மாறிவிடும். நாக்கை சுத்தம் செய்யும்போது உள் உறுப்புக்களின் ஆரோக்கியம் காக்கப்படும்.

வாய் துர்நாற்றத்துக்கு வாயில் அதிகமாக வளரும் பாக்டீரியா மிக முக்கிய காரணம். நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியா வளர்ச்சி தடைப்படுகிறது. தொடர்ந்து வாயை சுத்தமாக பராமரிக்கும்போது வாய் துர்நாற்றம் மறைகிறது.

காலை, இரவு என இரண்டு வேளையும் பிரஷ் செய்துவிட்டு, நாக்கை சுத்தம் செய்வது, நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களைத் தூண்டுகிறது. இதனால் சுவை உணர்வு அதிகரிக்கிறது.

தினமும் நன்கு பற்கள், நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியாவின் வளர்ச்சி தடைப்படுகிறது. இதன் காரணமாக சொத்தைப் பல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.