தப்பான நேரத்தில் குளிப்பதால் ,எந்த நோயிடமிருந்து தப்பிக்க முடியாது தெரியுமா ?

 
bath

தினமும் குளிப்பது உடல் அழுக்கை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் ,உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் .ஆனால் சிலருக்கு சாப்பிட்ட பின் குளிப்பதை வாடிக்கையாக செய்வார்கள் . இன்னும் சிலர் இரவில் சாப்பிட்ட பின் குளிக்கும் பழக்கத்தை வைத்து கொண்டு இரவில் குளிப்பார்கள் . இப்படி செய்வது பல நோய்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து நாம் வரவேற்கும் செயல் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் 

bath

இரவு உணவோ ,இல்லை மதிய உணவோ எந்த உணவு உட்கொண்ட பிறகு குளிக்கும் பழக்கமானது   குளிப்பவருக்கு உடல நல கோளாறுகளை வரவைக்கும் . இப்படி தவறான நேரத்தில் குளிப்பதன்  காரணமாக குளிப்பவரின் உடல்  எடை கன்னாபின்னாவென்று அதிகரிக்கலாம் . அது மட்டுமல்லாமல் தப்பான நேரத்தில் குளிக்கும் அந்த நபருக்கு  அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வயிற்று உபாதைகள் தொடர்ந்து ஏற்படலாம் . எனவே , இதுபோன்ற தவறான  பழக்கவழக்கங்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ,அந்த நபர்  பல நோய்களின் பிடியில் சிக்கி அவஸ்தை படலாம் .

இதன் காரணமாக காலை உணவு இல்லை , இரவு உணவாக இருந்தாலும் சரி, சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது.ஏனெனில் குளித்த பிறகு, மனிதனின் உடல் வெப்பநிலை உயர்கிறது, இதன் காரணமாக உணவு சரியாக ஜீரணமாகாது.அதனால் கோடை காலத்தில்  பலமுறை குளிக்க நேர்ந்தாலும் சரி சாப்பிடுவதற்கு முன்பே குளித்து உடல் நலத்தினை காப்பாற்றி கொள்ளுங்கள்