திராட்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? – ஆச்சரிய பலன்கள்

 

திராட்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? – ஆச்சரிய பலன்கள்

ஆயிரக் கணக்கான ஆண்டு மனித நாகரீகத்துடன் தொடர்புடைய பழங்களுள் ஒன்று திராட்சை. பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பிங் என்று பல நிறங்களில் திராட்சை இருக்கிறது. அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. திராட்சைப் பழத்தில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன, அதன் மருத்துவ பலன்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்!

திராட்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? – ஆச்சரிய பலன்கள்

திராட்சையில் அதிக கலோரி உள்ளது. ஒரு கப் (தோராயமாக 150 கிராம்) திராட்சையில் 104 கலோரி, 27.3 கிராம் கார்போஹைட்ரேட், 1.1 கிராம் புரதம், ஒரு நாள் தேவையில் 27 சதவிகிதம் வைட்டமின் சி, 28 சதவிகிதம் வைட்டமின் கே, ஏழு சதவிகிதம் தயாமின், ஆறு சதவிகிதம் ரீபோஃபிளேவின், 8 சதவிகிதம் பொட்டாஷியம், 10 சதவிகிதம் தாமிரம் உள்ளது.

ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த பழம். இது உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கிறது. சர்க்கரை நோய், மாரடைப்பு உள்ளிட்டவற்றிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. திராட்சையில் 1600க்கும் அதிகமான உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மூலக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) என்ற ரசாயனம் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களை வராமல் தடுக்க உதவுகிறது. புற்றுநோய் சிகிச்சையில் இந்த மூலக்கூறு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர திராட்சையில் உள்ள quercetin, anthocyanins மற்றும் catechins ஆகியவையும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இரண்டு வாரத்துக்கு தினமும் அரை கிலோ அளவுக்கு திராட்சை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

திராட்சையில் குறிப்பிடத்தகுந்த அளவில் பொட்டாஷியம் உள்ளது. இது ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. மேலும் தொடர்ந்து திராட்சை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திராட்சையில் அதிக கலோரி இருந்தாலும் அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் 53 தான். எனவே, ரத்தத்தில் குளுக்கோஸ் ஆக கலக்கும் வேகம் குறைகிறது. இதில் உள்ள சில மூலக்கூறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. திராட்சையில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. மூளை செயல் திறனை, நினைவாற்றலை மேம்படுத்துகிறது.