நம்மை மூச்சு விட வைத்து ,கொரானா வைரசுக்கு மூச்சு முட்ட செய்யும் மூலிகை டீ

 

நம்மை மூச்சு விட வைத்து ,கொரானா வைரசுக்கு  மூச்சு முட்ட செய்யும் மூலிகை டீ

தற்போதைய சூழ்நிலையில், கோவிட்-19 இன் இரண்டாவது அலை மிக வேகமாகவும் அதிக வீரியத்துடனும் இந்தியாவில் பரவி வருகிறது. மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நேரத்தில், உங்கள் உடல்நலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு, நல்ல ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் சில எளிய சமையலறை ரகசியங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கொரோனா பெருந்தொற்று தலைவிரித்து ஆடும் இந்த வேளையில்  நுரையீரலின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதே இப்போது முக்கியம் என்று அனைத்து மருத்துவ வல்லுநர்களும் கூறுகிறார்கள். கொரோனா பாதித்தவர்கள் அனைவருக்கும்  சுவாச பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. நிமோனியா, ஏஆர்டிஎஸ் என்னும் சுவாச கோளாறு , செப்சிஸ் ஆகிய பாதிப்புகள் நுரையீரலின் செயல்பாட்டை தடுத்து ,கோவிட்-19 பாதிப்புக்குக் உள்ளாக்குகிறது . .

 இந்தியா முழுவதும் கோவிட் பாதிப்புகள் அதிகமாகி வரும் வேளையில் வைட்டமின் சி, துத்தநாகம் (ஸிங்க்)போன்ற ஊட்டச்சத்துகளோடு, ஆக்ஸிஜனேற்றம்  (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள்)உள்ள உணவுகளை சாப்பிடுவதோடு, சுவாச பயிற்சிகளையும் ஒழுங்காக செய்வதும் அவசியம். நுரையீரலுக்கு சுகம் தரும் மூலிகை டீ ஒன்றை தினமும் பருகலாம்.

நம்மை மூச்சு விட வைத்து ,கொரானா வைரசுக்கு  மூச்சு முட்ட செய்யும் மூலிகை டீ

தேவையானவை: சிறிதளவு இஞ்சி, 1 தேக்கரண்டி இஞ்சி பொடி (இஞ்சியை உலர வைத்து இடிக்கலாம்; சுக்குப் பொடி), இலவங்கபட்டை அல்லது பட்டை தூள், துளசி இலைகள் சில, கற்பூரவல்லி இலையை உலர்த்தி பொடித்த பொடி – 1 தேக்கரண்டி, 3 மிளகு, 2 ஏலக்காய் (நசுக்கியது), கால் தேக்கரண்டி அளவு வெந்தயம், ஓமம் ஒரு சிட்டிகை, சிறிதளவு சீரகம், 2 கிராம்பு

செய்முறை: மேலே கூறிய அனைத்தையும் இரண்டு கப் அளவு தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கவும், 10 நிமிடம் கொதித்த பின்னர் ஜூவாலையை மிதமாக வைக்கவும் (சிம்மர்). பின் வடிகட்டி அருந்தவும். அருந்துவதற்கு நெடி வீசுவதுபோல் உணர்ந்தால் சிறிதளவு தேன் அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்..

ஒருவர் சமையலறையில் பித்தளை மற்றும் இரும்பு கடாய், தவா  ஆகியவற்றில் சமைப்பதால், அது நமக்கு நல்ல ஆற்றலை தருகிறது.  இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு சத்தானதாகவும், நோய்களை திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவும் என்று கூறப்படுகிறது.