மோரில் இவ்வளவு நன்மைகளா…!  ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.!

 

மோரில் இவ்வளவு நன்மைகளா…!  ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.!

சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் மோரைக்  குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். குறிப்பாக, உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், மோர்…  உங்கள் சரும அழகிற்கும் காரணமாக இருக்கும் என்பது தெரியுமா!?  மோர் குறித்து பலருக்கும் தெரியாத  பல நன்மைகளை இப்போது பார்க்கலாம்

சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் மோரைக்  குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். குறிப்பாக, உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், மோர்…  உங்கள் சரும அழகிற்கும் காரணமாக இருக்கும் என்பது தெரியுமா!?  மோர் குறித்து பலருக்கும் தெரியாத  பல நன்மைகளை இப்போது பார்க்கலாம்

buttermilk

வெயின் எரிச்சலை போக்கும்:

மோர் உடலில் உள்ள சூட்டை தணிப்பது மட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியையும்,கருமையையும் போக்கவல்லது.இதில் வைட்டமின் A மற்றும் C இருப்பதால் இவை சரும அழகை சீராக பாதுகாக்கவல்லது.

body heat

பல நாடுகளில் இயற்கையை பாதிக்கும் வகையில் இருக்கும் கெமிக்கல் பொருட்கள்  சன் ஸ்கிரீனில் இருப்பதால் அவை தடைசெய்யப்பட்டுள்ளன, அதற்கு மாறாக இயற்கையான மோரினை உங்கள் முகத்தில் தினமும் தடவி வந்தால், முகத்தில் உள்ள கருமை திட்டுகளும் மறைந்து,சீரான ஸ்கின் டோனாகும்.

பருக்களுக்கு குட் பை சொல்லுங்க:

பருக்களினால் உங்களுக்கு மிகவும் தொல்லையாக உள்ளதா… இதனால் உங்கள் கான்ஃபிடென்ஸ் லெவல் உங்களுக்கே குறைந்து காணப்படும். கவலை வேண்டாம் ,

pimple

தினமும் மோரை குடிப்பதுமட்டுமன்றி உங்கள் முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் ஒரு நாள்விட்டு ஒருநாள் தடவி வாருங்கள் இதன்மூலம் உங்கள் பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து .உங்கள் முகமும் மீண்டும் பொலிவு பெறுவது நிச்சயம்

பேஷியல் இனி வேண்டாம்:

உங்கள் முகம் இனி ஃபேஷியல் செய்யாமலேயே பொலிவாகும். அதெப்படி முடியும்  என்று யோசிக்கிறீங்களா.. தினமும் புளித்துப்போகாத மோரை தினமும் குடித்துவந்தால் முகத்தில் இயல்பாகவே

facewash

 பளிச்சென்ற களை வந்துவிடும் இது உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பிரைட்டாக வைக்கும். 

இனி நோ ஓல்ட் லுக்:

முகத்தில் வயதாக வயதாக,சுருக்கங்களும் மெல்லிய கோடுகளும் தோன்ற ஆரம்பிக்கும்.இவை உங்கள் முகத்தைக்  களை  இழந்ததாகவும் டல்லாகவும் காட்டும், தவிர, சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் காணப்படும்.

aging

இதனை தடுக்க, மோரில் சந்தனம் அல்லது மஞ்சளை மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து வர முகத்தில் நல்ல மாறுதல்கள் வரும். இதனை வாரத்திற்கு 2 முறை  செய்யுங்கள்.
இயற்கையான மேக் அப் ரிமூவர்:

நீங்கள் உங்கள் முகத்தில் உள்ள மேக் அப்பை நீக்க தினமும் மேக் அப் வைப்ஸ் மேக் அப் ரிமூவர்,மெஸ்ஸலர்  வாட்டர் போன்றவற்றை யூஸ் செய்யுறீங்களா? இனிமே அவையெல்லாம் வேண்டாம். இயற்கையான முறையில் இருக்கும் மோரினை யூஸ் பண்ணுங்க.. நல்ல பலனைப் பெறலாம்.இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு,மேக் அப்,ஆகியவைகளை போக்கி பளிச்சென்று காட்டும்..

face

இனிமேல் தேவையில்லாத  கெமிக்கல்களைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையிலேயே உங்கள் சருமத்தையும்,ஆரோக்கியத்தையும் பாது காப்பதுதான் நெடுநாள் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் கைகொடுக்கும்.