வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்!

 

வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்!

தாமிரம், வெண்கலப் பாத்திரத்தில் வைத்த தண்ணீரை அருந்துவது உடலுக்கு நன்மை தரும் என்று சொல்வார்கள். அதை விட வெள்ளி டம்ளரில் தண்ணீர் அருந்தி வந்தால் முழு உடலுக்கும் பலன் கிடைக்கும். உடலில் உள்ள நச்சுக்களைச் சிதைத்து அதன் செயல் திறனை குறைக்கும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு. வெள்ளி டம்ளரில் தண்ணீர் அருந்தி, வெள்ளித் தட்டில் உணவு உட்கொண்டு வருவது ஆரோக்கியமானது என்று சொல்லப்படுகிறது.

வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்!

தாமிரத்தைப் போலவே வெள்ளி பாத்திரமும் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் ஆன்டிசெப்டிக் தன்மை காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

வெள்ளியுடன் வினை புரியும் தண்ணீர், நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து, சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது. ஆன்டி-வைரலாக, ஆன்டி – பாக்டீரியலாக, ஆன்டி – ஃபங்கலாக இது செயல்பட்டு, சைனஸ், சுவாசக் குழாய் நோய், ஆஸ்துமா பிரச்னைக்கு தீர்வளிக்கிறது.

வெள்ளியுடன் தண்ணீர் வினை புரிவதால் தண்ணீரில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. இதனால் இ-கோலி, சாலமோனெல்லா உள்ளிட்ட பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்பு குறைகிறது.

வெள்ளி டம்ளரில் தண்ணீர் அருந்தும்போது அது செரிமான மண்டலத்தின் செயல் திறனை மேம்படுத்துகிறது.

வெள்ளி டம்ளரில் அருந்தும் தண்ணீர் வயோதிகத்தை ஒத்திப்போடும் தன்மை கொண்டதாக மாறுகிறது. இந்த தண்ணீரில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சருமத்தில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸ்ஸை கட்டுப்படுத்தி, புதிய சரும செல் உருவாக தூண்டுகிறது. மேலும் இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

வெள்ளி டம்ளர் தண்ணீர் சரும நோய்களை போக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் அரிப்பு, படர்தாமரை, புண்கள், சிவத்துப் போதல், முகப்பரு போன்ற சரும பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

வெள்ளி டம்ளரில் நீரை நிரப்பி குடிப்பதால் இந்த பலன்கள் கிடைத்துவிடாது. காய்ச்சி, ஆறவைத்த தண்ணீரை வெள்ளி பாத்திரத்தில் இரவில் ஊற்றி வைத்துவிட வேண்டும். இந்த தண்ணீரை காலையில் அருந்த வேண்டும். இதை செய்ய பொறுமை இல்லை எனில், வெந்நீரை வெள்ளி டம்ளரில் ஊற்றி 4-5 நிமிடங்களுக்கு வைத்துவிட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை அருந்தலாம்.

தண்ணீர் ஊற்றி வைக்க வெள்ளி பாத்திரம் இல்லை என்ற கவலை வேண்டாம். ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீரைப் பிடித்து வைத்து, அதில் வெள்ளி நாணயத்தைப் போட்டு, இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் அருந்தலாம்.