அடிக்கடி டாஸ்மாக் மூடுறதால,சனியன் புடிச்ச சரக்கை விட நினைக்கிரிங்களா ? -சில வழிகள்

 

அடிக்கடி டாஸ்மாக் மூடுறதால,சனியன் புடிச்ச சரக்கை விட நினைக்கிரிங்களா ? -சில வழிகள்

பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்…

தேதியை குறித்துக் கொள்ளுதல்

குடியை விட சில முக்கிய தேதியை தேர்ந்தெடுக்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும்.

குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.

அடிக்கடி டாஸ்மாக் மூடுறதால,சனியன் புடிச்ச சரக்கை விட நினைக்கிரிங்களா ? -சில வழிகள்

கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்

குடியை ஒரே நாளில் விட்டு விட முடியாது. முதலில் சிறிது சிறிதாக விட முயற்சி செய்யுங்கள். அதிகமான குடி காரணமாக பராலிசிஸ், தலைவலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடிக்கும் எண்ணத்தை தடுக்கும்.

உணவு மூலம் தவிர்த்தல்

குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனால் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.

வைட்டமின் பி மாத்திரைகள்

குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடுக்கும். வைட்டமின் பி எனப்படும் தையாமின் குறைபாடு, கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மனநிலையை உணர்தல்

உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்சனைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்

குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர்பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போவதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர்களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.

தண்ணீர் குடித்தல்

சுத்தமான தூய தண்ணீரின் அற்புதத்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளவும். உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித்தால், மது அருந்தும் ஆசை குறையும்.