ஐஸ் கிரீம் சாப்பிடுவதில் கொஞ்சம் நன்மையும் இருக்காம்!

 

ஐஸ் கிரீம் சாப்பிடுவதில் கொஞ்சம் நன்மையும் இருக்காம்!

ஐஸ் கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல், உடனே சளி பிடித்துக்கொள்ளும் என்று சொல்வார்கள். கோடைக் காலத்தில் கூட சாப்பிடக் கூடாது என்று தடைகளைப் போடுவார்கள். ஆனால் கோடையோ, மழையோ, குளிரோ எந்த காலத்திலும் ஐஸ் கிரீம் சாப்பிட பிடிக்காது என்று கூறுபவர்கள் யாராவது இருப்பார்களா என்ன… பாலில் செய்யப்படாத, அதிக அளவில் வனஸ்பதி உள்ளிட்ட தாவர கொழுப்புகளை சேர்த்து செய்யப்படும் ஐஸ் கிரீம் போன்று தோற்றம் அளிக்கும் உறைய வைக்கப்பட்ட இனிப்புகள் எந்த காலத்தில் எடுத்துக்கொண்டாலும் தவறுதான்.

ஐஸ் கிரீம் சாப்பிடுவதில் கொஞ்சம் நன்மையும் இருக்காம்!

அதற்கு பதிலில் பாலில் தயாரிக்கப்படும் ஐஸ் கிரீம்களை சாப்பிடுவது உடலுக்கு சில நன்மைகளைத் தருமாம்.

அதிக அளவில் ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டையில் சதை வளரும் என்பார்கள். அதை அகற்ற அறுவைசிகிச்சை செய்தால், ரோஸ் மில்க் போன்ற குளிர்ந்த பானங்கள், ஐஸ் கிரீம்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். தொண்டை புண்களை ஆற்றும் திறன் ஐஸ் கிரீம்களுக்கு உண்டு.

பாலில் செய்யப்படும் ஐஸ் கிரீமில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடல் தசைகளை உறுதியாக்கும். மழையோ, குளிரோ ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீம் சாப்பிடுவதன் மூலம் தசைகள், சருமம், எலும்பு மற்றும் ரத்தத்திற்கு அது நன்மையாகவே மாறும். எனவே, முடிந்தவர்கள் வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயாரித்து சாப்பிடுவது நல்லது.

எந்த வயதினராக இருந்தாலும் ஐஸ் கிரீம் சாப்பிடுவது மன மகிழ்ச்சியை தரும். மனதில் இருந்த இறுக்கத்தை, கவலையை சற்று நேரத்துக்கு தள்ளிப்போட வைக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மனம் அமைதி அடைந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்று தெளிவாக சிந்திக்க நேரம் கிடைக்கும்.

ஐஸ் கிரீமில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு உடனடி எனர்ஜியை தரும்.

ஐஸ் கிரீமில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. எனவே, ஐஸ்கிரீம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். எனவே, உங்கள் ஐஸ் கிரீமை அளவோடு மகிழ்ச்சியோடு எடுத்துக்கொள்ளுங்கள்!