கொரோனா தொற்று காலத்தில் நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள்!

 

கொரோனா தொற்று காலத்தில் நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள்!

கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அது முதலில் நுரையீரலில்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரலின் காற்று அறைகளை பாதிப்படைய செய்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்து, உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது. சில உணவுகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நுரையீரலை பாதுகாக்கும் சில உணவுகளைப் பற்றி பார்ப்போம்!

கொரோனா தொற்று காலத்தில் நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள்!

பீட்ரூட் மற்றும் அதன் இலை நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பீட்ரூட் மற்றும் அதன் இலையில் நைட்ரேட் நுரையீரலின் செயல் திறனை மேம்படுத்துகிறது. மேலும், நுரையீரலில் ஏற்படும் நோய்த் தொற்றைத் தடுக்கிறது. சிஒபிடி எனப்படும் நாட்பட்ட மூச்சுக்குழாய் இறுக்கம் அல்லது சுருக்க நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. நுரையீலில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கச் செய்கிறது.

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நுரையீரலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்று. எனவே வேக வைத்த எண்ணெய் சத்து மிக்க மீன்களை சாப்பிடலாம்.

தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வருவது நுரையீரலை பாதுகாக்கும். குறிப்பாக சிகரெட் பழக்கத்தை கைவிட்டவர்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது. ஆப்பிள் சாப்பிட்டு வருவது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும். இதற்கு ஆப்பிளில் உள்ள ஃபிளவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் காரணமாக அமைகிறது.

கொரோனா தொற்று காலத்தில் மஞ்சள் பால் அருந்தும்படி சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி ஆற்றல் உள்ளது. இது நுரையீரிலில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவும், தொற்று ஏற்பட்டால் செல்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கவும் செய்யும். சிகரெட் பழக்கத்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை சேர்த்துக்கொள்வது நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தக்காளியில் உள்ள லைக்கோபீன், கரோட்டினாய்டு உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன. தக்காளியை சாப்பிட்டு வருவது மூச்சுக் குழாய் வீக்கத்தைத் தடுக்கிறது. இதன் மூலம் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்களின் சுவாச பிரச்னைகள் குறைகிறது.

தினமும் க்ரீன் டீ அருந்துவது நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். க்ரீன் டீ-யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிட்ண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பொருட்கள் நுரையீரலில் கொரோனாவால் ஏற்படும் ஃபைப்ரோசிஸ் மற்றும் தழும்புகளைத் தவிர்க்க உதவுகிறது.