மாரடைப்பைத் தவிர்க்க செய்ய வேண்டிய ஐந்து வாழ்வியல் மாற்றங்கள்!

 

மாரடைப்பைத் தவிர்க்க செய்ய வேண்டிய ஐந்து வாழ்வியல் மாற்றங்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு 33 விநாடிக்கு ஒருவர் இதய நோயால் உயிரிழக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை இதுதான். இந்தியாவின் நம்பர் ஒன் உயிர் கொள்ளி மாரடைப்பு என்று கூறுகிறது மருத்துவ உலகம்.

மாரடைப்பைத் தவிர்க்க செய்ய வேண்டிய ஐந்து வாழ்வியல் மாற்றங்கள்!

2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 5.4 கோடி பேர் இதய நோயால் அவதியுற்று வருகின்றனர். இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகளில் நான்கில் ஒன்று இதய நோய் பாதிப்பு, பக்கவாதம் காரணமாக ஏற்படுகிறது என்று கூறுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள், பாதிப்புகள் காரணமாக விரைவில் இதய நோய் உயிரிழப்பு அதிகம் நிகழும் நாடாக இந்தியா மாறும் என்று எச்சரிக்கின்றனர்.

இதய நோய் தவிர்க்க நம்முடைய வாழ்க்கையில் சில எளிய மாற்றங்கள் செய்தாலே போதும்.

இன்றைக்கு 30 வயதைக் கடந்தவர்களுக்கும் கூட மாரடைப்பு வருவதை சர்வ சாதாரணமாக காண்கிறோம். எனவே, 30 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எக்கோ பரிசோதனை செய்வதன் மூலம் இதய ரத்தக் குழாய்களில் எந்த அளவுக்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை அறிந்து இதய நோய்க்கான வாய்ப்பை கணக்கிடலாம்.

புகை பகை…

சிகரெட் புகைத்தால் இதய நோய்க்கு முக்கிய காரணியாக உள்ளது. எனவே, சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அதை நிறுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து உணவு…

ஆரோக்கியமான உணவு இதய நோயை வெல்ல சிறந்த வழி. இது இதய நோய்க்கு மட்டுமல்லாது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்டிரால் அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.

உடற்பயிற்சி…

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்துக்கு 150 நிமிடங்கள் அளவுக்காவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, கொழுப்பு அளவைக் குறைக்க, உடல் எடை குறைக்க உதவும். எனவே, தினசரி உடற்பயிற்சி என்பதை கட்டாயமாக்க வேண்டும்.

ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு…

ரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடுக்கும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, கெட்ட கொழுப்பான எல்.டி.எல் அளவைக் குறைக்க வேண்டும். நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை அதிகரிக்க வேண்டும்.

மன அழுத்தம் தவிர்க்க வேண்டும்…

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் அதிகரிக்கும்போது சிலருக்கு அதிகம் பசிக்கும். இது உடல் பருமன் உள்ளிட்ட பல பாதிப்புக்கு காரணமாகிவிடும். சிலர் மன ஆறுதலுக்காகப் புகைப்பது, மது அருந்துவது என்ற தவறான பழக்கத்துக்கு ஆளாவார்கள். இது எல்லாம் இதயத்துக்கும், உடல் நலத்துக்கும் ஆபத்தானது. எனவே, மன அழுத்தம் தவிர்ப்பது நல்லது.