• August
    19
    Monday

Main Area


நரி

நரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. தனது நீளமான நிழலைப் பார்...

ஆரோக்கியத்தைக் காக்கும் ஆவாரம் பூக்கள்!

பூக்களில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால், நமக்குத் தெரிந்த மல்லி, கனகாம்பரம், முல்லை, சாமந்தியைத் தவிர மற்றப் பூக்களை எல்லாம் மறந்து விட்டோம். யாராவது மூச்சு விடாமல், நூறு பூக்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சொன்னால், கைதட்டி, வாய்பிளந்து ரசிக்கும் நிலைக்கு நம் வாழ்க்கை சென்று விட்டது எல்லாம் காலக்கொடுமை தான்.

flower

பூக்களை வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமே  பார்த்து வளர்கிற தலைமுறை இன்று உருவாகி வருகிறது. ஒவ்வொரு பூக்களிலுமே எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை நாமும் மறந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல தவறிவிட்டோம். 
‘ஹைபிஸ்கஸ்’ என்றால் என்னவென்று சொல்லும் குழந்தைகளுக்கு செம்பருத்திப் பூவின் குணமும், மருத்துவ பலன்களையும் சொல்ல தெரிவதில்லை. இன்று பூக்களின் நறுமணங்களை சோப்புக்கட்டிகளில் சேர்க்கப்படும் எஸென்ஸ்களில் அனுபவிக்கிறோம்.
அப்படி இயற்கையாய் கிடைத்து வந்த பூக்களில் பல அதிசயங்களைக் கொண்டது தான் ஆவாரம் பூ. 
‘ஆவாரை பூத்திருக்க... சாவாரை கண்டதுண்டோ!’ என்கிற ஒற்றை வரி சொல்லும் ஆவாரம் பூக்களின் அற்புத குணங்களை. எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக, செழிப்பாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை என ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. 

flower

எண்ணற்ற பலன்களைத் தரும் ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களைத் தெரிந்து வைத்திருந்தாலே நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் அழகை பார்க்கும் போதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்கும்.
இந்த ஆவாரை பூக்களை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் தரிக்கும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

flower

தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து, உடம்பில் தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும். 
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைத்து, இவற்றுடன் சுத்தமான பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் சரியாகும். இனி... ஆவாரம் பூக்களைப் பார்த்தால், ரசித்து செல்லாமல், பயன்படுத்த துவங்குங்கள்!

gowtham Mon, 08/19/2019 - 12:55
avaram flower Health tips ஆவாரம் பூக்கள் லைப்ஸ்டைல்

English Title

Flowers That Save Health

News Order

0

Ticker

0 உலகின் மிகச் சிறந்த கேமிரா எது? இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் நினைவலைகள்!

இந்த உலகின் மிகச் சிறந்த கேமிரா எது? இதற்கு விடையைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் யார் என்று பார்ப்போம்.
ஹோமை வியாரவல்லா.... இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். குஜராத் மாநிலம் வதோதராவில், 1913-ம் ஆண்டு பிறந்தவர். அன்றைய பாம்பே பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த ஹோமை, தனது வாழ்க்கை முழுவதும் காந்திய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தவர். 

homai vyarawalla

தனது 29 வயதில், டெல்லியில் குடும்பத்துடன் குடியேறிய ஹோமை, சில வருடங்களிலேயே அன்றைய அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட புகைப்படக்காரராகவும், பத்திரிகைப் புகைப்படக்காரராகவும் வளர்ந்து வலம் வந்தார். ஹோமை வியாரவல்லாவின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், அன்றைய காலக்கட்டங்களில் அலங்கரிக்காத பத்திரிகைகளே இல்லை எனும் அளவிற்கு சுறுசுறுப்புடன் துறுதுறு என்று வலம் வந்த ஹோமை, தனது கணவரின் இறப்புக்குப் பிறகு 1973-ம் ஆண்டு மீண்டும் வதோதராவுக்கே சென்றுவிட்டார்.

homai

இன்றைய பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களுக்கு ஹோமையின் வாழ்க்கை முறை நிறைய பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இவரது கேமராவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவர்களில் முதலிடம் எப்போதும் நேருவுக்கு தான். முதல் பாரத பிரதமரான நேருவின் நிறைய அபூர்வமான தருணங்களைப் புகைப்படங்களில் சிறைப்பிடித்த பெருமை ஹோமைக்கு உண்டு.  ஜவஹர்லால் நேருவைப் புகைப்படம் எடுப்பதென்றாலே மிகவும் உற்சாகமாகிவிடுவார். இன்று பல்வேறு இடங்களில் கம்பீரமாக நிற்கும் நேருவின் புகைப்படங்களில் பலவற்றுக்குச் சொந்தக்காரர், ஹோமை வியாரவல்லா. 
இவரால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் 'Dalda 13' என்னும் பெயரிலேயே வெளிவந்திருக்கும். ஏனெனில், இவர் பிறந்த வருடம் 1913. கணவரை முதன்முதலில் சந்தித்தபோது இவரின் வயது 13. இவரது முதல் காரின் நம்பர் பிளேட் 'DLD 13'. கணவரின் இறப்புக்குப் பின்னர் இவரது வாழ்க்கையில் நிறைய  மாற்றங்கள் உண்டானது. புதிதாக புகைப்படம் எடுக்க வந்த பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களின் நடவடிக்கையும், அவர்கள் புகைப்படம் எடுக்கும் விதமும் ஏனோ ஹோமைக்குப் பிடிக்காமல் போனது. தள்ளுமுள்ளு, பெண் என்கிற ஏளனம் என்று பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் வேற்றுமை பாராட்டியதைப் பார்த்து மனம் வெறுத்து போய், ஒரு கட்டத்தில் தனக்குப் பிரியமான கேமராவை தொடாமல், அன்றிலிருந்து புகைப்படம் எடுப்பதையே நிறுத்திவிட்டார் ஹோமை வியாரவல்லா.

homai

இது பற்றி கூறும் போது, ‘புகைப்படம் எடுப்பது என்பது வெறும் தொழில் மட்டும் கிடையாது. அது ஒரு கலை. ஒரு சாதாரண நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் வரும் போது கூட முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசைக்கு ஓடுவது போன்ற கலாச்சாரங்கள் நிச்சயம் பத்திரிக்கைத் துறைக்கு சாபக்கேடு தான். நிறைய பெண்கள் சுதந்திரமாக பத்திரிக்கைத் துறைக்கு வர வேண்டும். அதற்கான சூழல் இங்கே அமையவில்லை. பிற துறைகளை விட பத்திரிக்கைத் துறையில் ஆண், பெண் வேறுபாடுகள் இருப்பது இன்னும் அபத்தம் என்று கூறிய ஹோமையிடம் ஒரு முறை, ‘உலகின் சிறந்த கேமராவாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.
நொடியும் தாமதிக்காமல் பதில் சொன்னார்... கண்கள்... ஆம். கண்கள் தான் உலகின் மிகச் சிறந்த கேமரா. நமது கண்கள் தான் ஒரு காட்சியைப் பார்த்தவுடன், மனதுள் அந்த காட்சிக்காக ஒளியை ஏற்படுத்தி, சட்டங்களுக்குள் புகைப்படங்களாக மாற்றிவிடுகிறது. அந்த கண்களின் காட்சியைத் தான் கேமரா வழியாக நாம் பார்க்கிறோம்’ 

homai

டெல்லியின் அரசியல் மேடைகளில், பிரபல தலைவர்களின் பிரத்யேக தருணங்களில் என்று சுறுசுறுப்பாய் இயங்கி வந்த முதல் பெண் புகைப்படக்காரரை சக பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களே வேற்றுமை பாராட்டி வீட்டில் முடங்கச் செய்தார்கள். இதன் பின்னும் யாரும் அது பற்றி பெரிதாய் வருந்தியதாய் தெரியவில்லை. மத்திய அரசு, ஹோமையின் சேவைகளைப் பாராட்டி, 2011-ம் ஆண்டு, அவரது 98-வது வயதில் வாழ்நாள் சாதனைக்காக 'பத்ம விபூஷன்' விருதை கொடுத்து கெளரவித்தது. 2012 ஜனவரி 15-ம் தேதி இந்தியாவின் முதல் பெண் கேமராமேனான ஹோமை தனது இறுதி மூச்சையும் நிறுத்திக் கொண்டார். ‘பத்ம விபூஷன்’ விருது வாங்கிய முதல் இந்திய புகைப்படக்காரரும் ஹோமை வியாரவல்லா தான்!

gowtham Mon, 08/19/2019 - 12:22
homai vyarawalla first female photographer ஹோமை வியாரவல்லா லைப்ஸ்டைல்

English Title

Which is the best camera in the world? Memories of India's first female photographer!

News Order

0

Ticker

0 குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுக்கறீங்களா... உஷார்!

இன்றைய தலைமுறை குழந்தைகள் ஒரு பக்கம் அறிவியல் வரத்தோடு வளர்ந்து வந்தாலும், இன்னொரு வகையில் சாபத்தோடு வளர்வதாகவே தோன்றுகிறது. நீச்சல், நடைபயிற்சி, புழுதி பறக்கும் தெருக்களில் விளையாட்டு என்று மறைமுகமாக அவர்களது உடல் உழைப்பை வீணடித்து பல பெற்றோர்கள் டியூஷன் செண்டர்களிலும், தொலைக்காட்சிகளின் முன்னாலும், வீட்டின் வரவேற்பறையில் ஸ்மார்ட் போன் கொடுத்தும் அமர வைத்து விடுகிறார்கள்.

smartphone

இன்று நமது வாழ்வின் முக்கிய அங்கமாகவே ஸ்மார்ட் போன் மாறிவிட்டது. அழுகிற குழந்தைகளின் கைகளில் கூட, ஏதோவொரு வீடியோவில் பாட்டைப் போட்டு, ஸ்மார்ட் போனை கைகளில் கொடுத்து விடுகிறார்கள்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில், குழந்தைகள் பல மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர். பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்றைய நிலவரத்தில் குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி வருகின்றது. ஒரு வயது குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போனுக்கு குழந்தைகள் அடிமைகளாகவே மாறி வருகிறார்கள்.

smartphone

உங்களது குழந்தைகள் எப்படி ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துகின்றார்கள்? 
கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக் கொண்டு தானே பயன்படுத்துகிறார்கள். இது சரியான முறையல்ல. நீண்ட நேரம் அதே நிலையில் குழந்தைகள் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படும். குழந்தைகள் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது நேராக உட்கார்ந்து பயன்படுத்த கற்றுக் கொடுங்கள். தலையை குனிந்து போனை பார்ப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள். அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை கவனத்தை ஈடுபடுத்துங்கள்.  குழந்தைகளை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். 
குழந்தைகளுக்கு 8-9 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். எனவே குழந்தைகளை 8-9 மணி நேரம் தூங்க விடுங்கள். அதிக நேரம் தூங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகநேரம் தூங்குவது, குழந்தைகளின் உடல்நலத்திற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக காலையில் குழந்தைகளை எழுப்பும்போது, அடித்து எழுப்பாதீர்கள்.

smartphone

குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. அதற்குப் பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். ஸ்மார்ட் போன் பயன்படுத்த உங்கள் குழந்தைகள் தெரிந்து வைத்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அளவோடு பயன்படுத்தவும் கற்றுக் கொடுங்கள். அப்போது தான் எதிர்கால தலைமுறை ஆரோக்கியத்தோடும் வளரும்!

gowtham Fri, 08/16/2019 - 15:13
childrens useage of smartphone குழந்தை லைப்ஸ்டைல்

English Title

Don't Give smart phone to your children

News Order

0

Ticker

0 கவலைக்கான உண்மையான மருந்து

அந்த நகரின் புகழ் பெற்ற மருத்துவரான இக்பாலிடம் அவசர அவசரமாக நோயாளி ஒருவர் வந்தார். 
தனக்கு அதிக சோர்வாக இருக்கிறது. தலைச்சுற்றுகிறது. இரவில் நீண்ட நேரமாகியும் தூக்கமே வருவதில்லை என்று தனது உடம்பைப் பற்றி பலவிதமான அறிகுறிகளை அடுக்கிக் கொண்டே போனார். மருத்துவரான இக்பாலும் வந்திருந்தவரை பொறுமையாக பரிசோதித்து விட்டு, ''எந்த நோயும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் அளவுக்கு அதிகமாகவே கவலைப்படுகிறீர்கள். உங்களுக்கு மனச்சோர்வு அதிகமாகியிருக்கிறது.  அதற்கும் மருந்து ஒன்று இருக்கிறது. 

worry

இன்று மாலை நமது ஊரில் நடக்கும் புகழ் மிக்க சர்க்கஸ் நிகழ்ச்சியை கண்டு களியுங்கள். அந்நிகழ்ச்சியில் கிரிபால்டி என்ற கோமாளி பலவித வித்தைகளைக் காட்டி வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். கவலைக்கு மருந்து சிரிப்பு ஒன்றே. சிரித்தால் கவலை பறந்து விடும்” என்றார்.
அட போங்க டாக்டர். அங்கே கோமாளி வேஷமிடும் கிரிபால்டி நான் தான்” என்றார் நோயாளி.
கவலையில்லாத மனிதர்கள் என்று யாருமே இந்த உலகில் கிடையாது. எனக்கு கவலைகளே இல்லை என்று யாராவது சொன்னால் அவர்களை சந்தேகப்படுங்கள். ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னால் அவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள்.

happy

ஆம், கவலைக்கும் சந்தோஷத்துக்குமான வித்தியாசத்தை நாம் உணர்வதே இல்லை. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் நாம் அதே நேரம் கவலைப்படுவதால் பயனில்லை. இறைவனிடம் நம் குறைகளை சொல்லி அமைதி தேடுவதே நல்லது.

gowtham Thu, 08/15/2019 - 15:31
happiness sorrow சந்தோஷம் லைப்ஸ்டைல்

English Title

The real medicine for anxiety

News Order

0

Ticker

0 இப்படியெல்லாம் தலையில் பூ வைத்தால், தலைமுடி வளராது... எச்சரிக்கை!

பெண்களின் கேசத்திற்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை தவறாது பூக்களைச் சூடிக் கொள்வதால் தான் மணமுண்டா என்று இதிகாச காலங்களிலேயே சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.
ஆனால், பூக்களை தலையில் சூடிக் கொள்வதற்கும் ஒரு முறை உள்ளது. நாம் செய்யும் எந்த காரியத்தையும் அதன் பலன்களை அறிந்து, முறையோடு செய்தால் தான் அந்த காரியத்திற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். 

flowering

இதே போல தான் பெண்கள் பூச்சூடுவதற்கான முறைகளையும் பண்டைய தமிழர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக பூக்களைச் சூடும் போது எப்போதும், காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் தான் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. 
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது உங்களின் கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். 
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். 
முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். 

flowering

உடலில் எண்ணெய் தேய்க்கும் போது தாழம்பூ சூடலாம்.
தொடர்ந்து தலையில் பூக்களை வைத்து வருவதினால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

gowtham Wed, 08/14/2019 - 11:56
flowering disadvantages of flowers தலையில் பூ வைத்தால் லைப்ஸ்டைல்

English Title

If the flower is on the head, the hair will not grow ... Warning!

News Order

0

Ticker

0 தினமும் தலையில் பூ வைப்பதால் இத்தனை நன்மைகளா? 

பெண்கள் அழகுக்காகவும், வாசனைக்காகவும் மட்டும் தான் தினமும் தலையில் பூ வைத்துக் கொள்கிறார்கள் என்று இனிமேல் நினைக்காதீர்கள். தலையில் தினமும் பூ சூடிக் கொள்வதால், ஆரோக்கியமும் மேம்படுகிறது. தலையில் நீர் கோர்த்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது. ஒவ்வொரு பூக்களையுமே சூடிக் கொள்வதற்கான கால அளவுகள் இருக்கின்றன.

women

பூக்களைச் சூடும் கால அளவு
முல்லைப்பூ – 18 மணி நேரம்
அல்லிப்பூ – 3 நாள்கள் வரை
தாழம்பூ – 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ – 12 மணி நேரம்
செண்பகப்பூ – 15 நாள்கள் வரை
சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்
மகிழம் பூ மற்றும் குருக்கத்திப் பூவை நாம் சாப்பிடும் போது மட்டும் தான் சூடிக் கொள்ள வேண்டும்.
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ போன்றவைகளை அந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

women

இனி தலையில் பூக்களைச் சூடிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

gowtham Wed, 08/14/2019 - 11:42
flowering in head benefits of flowers பூ வைப்பதால் லைப்ஸ்டைல்

English Title

What are the benefits of flowering daily on the head?

News Order

0

Ticker

0 இப்போது என்பது மட்டுமே வாழ்க்கையில் நிஜம் !

துறவி ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். இன்று மாலைக்குள் இறந்து விடுவேன் என்று தன் சீடர்களிடம் தெரிவித்து விட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.
மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய். குரு மரணப்படுக்கையில் கிடக்கும் போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?  என்றனர் மற்றவர்கள். 

guruji

மூத்த சீடர், குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். எல்லோரும் கவலையோடு இருந்தனர்.குரு கண்களைத் திறப்பதும், யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், வந்து விட்டாயா? எங்கே நாவல்பழம்? என்றார். அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், குருவே. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே? என்றார். 
குரு சிரித்தபடி, என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தைருசித்து தின்னத் தொடங்கி விட்டார். இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன  என்று கேட்டார்.

guruji

குரு  சிரித்த படி, இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது என்று சொல்லி விட்டு இறுதி மூச்சை விட்டார். அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது என்பது மட்டுமே நிஜம். இதைத் தான் இந்து மதத்தில் ஆரம்பித்து, புத்த, ஜென் தத்துவங்கள் வரை அனைத்தும் போதிக்கிறது.

gowtham Tue, 08/13/2019 - 15:01
guruji and shishyar Story துறவி லைப்ஸ்டைல்

English Title

Only now is the reality of life!

News Order

0

Ticker

0 சரும பாதுகாப்பிற்கான இயற்கை க்ரீம் செய்முறை

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம். 

cream

பாதங்கள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. முகத்தை பராமரிக்கும் அளவிற்கு நாம் பாதங்களின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மாதத்தில் இரண்டு நாட்களிலாவது பாதங்களை மசாஜ் செய்து விடுங்கள். ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பில் முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக வெந்நீர் பரப்பி அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு இரண்டு பாதங்களையும் வைத்து கொள்ளவும். கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதோடு இறந்து போன சரும செல்கள் உதிர்ந்து பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.

நகங்கள் உடைந்து வெடிப்பும் கீறலுமாக இருந்தால் வாரம் ஒரு முறை, அரைகப் காய்ச்சி ஆறிய பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு குழைத்து காட்டன் பட்ஸில் தோய்த்து கால் விரல்களின் நகங்களின் மீது பூசி வரவும். இப்படி செய்து வந்தால், ரோஜா இதழ் போன்ற அழகு விரல்கள் அமைவது நிச்சயம். நகங்களை சதுர வடிவிலும் ஓரங்களை வட்ட வடிவிலும் வெட்டுவது தான் சரியான முறை. அப்போது தான் நகங்களில் இடுக்கில் மண் புகுந்து கொள்ளாது.

க்ரீம் செய்யும் விதம்

cream

உருளைக்கிழங்கு ஜூஸ்1/2கப்
எலுமிச்சைச் சாறு 1/4கப்
காய்ச்சி ஆறிய பால் 1/4கப்
பார்லி பவுடர் -3டீஸ்பூன்
இவை அனைத்தையும் கலந்து கால்களில் பூசி 20நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் மிருதுவான பாதங்கள் பொன் போன்று மின்னும். 

காலை கீழே ஊன்ற முடியாத அளவுக்கு பித்த வெடிப்பு தொல்லையா?
50கிராம் வெள்ளை எள்ளையும், 50கிராம் கசகசாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் மிக்சியில் போட்டு நைஸாகத் தூள் பண்ணிக் கொள்ளவும். அந்தப் பொடியுடன் 200மிலி நல்லெண்ணெய் கலந்து , கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி காலையும் மாலையும் தடவி வந்தால் கூடிய விரைவில் பித்தவெடிப்பு `டாடா’ சொல்லி விடும்.

gowtham Mon, 08/12/2019 - 15:21
natural cream Beauty Tips  இயற்கை க்ரீம் லைப்ஸ்டைல்

English Title

natural cream to protect skin

News Order

0

Ticker

0 இப்ராஹிமின் நேர்மை

ஒரு ஊரில் இப்ராஹிம் என்ற ஞானி வசிந்து வந்தார். வாழ்க்கை அதன் போக்கில் அனுபவித்து வாழ்ந்து வந்த இப்ராஹிம் ஒரு நாள் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது, அருகே இருந்த தோட்டத்திலிருந்து, ‘தோட்டத்தில் வேலை செய்வதற்கு இத்தனை தாமதமாகவா வருவது?’ குரல் வந்தது. ‘சீக்கிரம் வா... அந்த மரங்களுக்கு எல்லாம் நீர் பாய்ச்சு’ என்று அதிகாரத் தொனியில் ஒலித்தது குரல்.

garden

அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கு, மாந்தோப்பை பரமாரிப்பதற்கு பணியாளர் தேவைப்பட்டதால், வேலைக்கு ஆள் வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தார். இப்ராஹிம் அந்தப் பக்கமாக சென்றதும், தோட்ட வேலைக்குத் தான் வந்திருக்கிறார் என்று தவறுதலாக நினைத்து விட்டார்.
ஆனால், இப்ராஹிம் எதுவும் மறுப்பு சொல்லாமல், ‘இது இறைவனின் விருப்பம் போல’ என்று நினைத்துக் கொண்டு மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆரம்பித்தார். 
சிறிது காலம் சென்றதும், அந்த தோட்டத்தின் உரிமையாளரைப் பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு மாம்பழம் பறித்து தரும்படி பணக்காரர் உத்தரவிட, இப்ராகிமும் பறித்துக் கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் மாம்பழத்தின் புளிப்பு சுவை தாங்காமல் முகம் சுளித்தனர்.
இவ்வளவு நாள் பணி செய்தும் எந்த மரத்தில் பழம் இனிக்கும் என தெரியாதா? என கோபித்தார் பணக்காரர். 

imbrahim

ஐயா! காவல் பணியைத் தான் என்னிடம் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதி அளிக்கவில்லை என்றார் இப்ராஹிம்.
இப்ராஹிமின் நேர்மையைக் கண்ட பணக்காரர் வியப்பில் ஆழ்ந்து, இப்ராஹிமிடம் மன்னிப்பு கேட்டார்.

gowtham Mon, 08/12/2019 - 11:57
imbrahim தோட்டம் லைப்ஸ்டைல்

English Title

The integrity of Ibrahim

News Order

0

Ticker

0 சுந்தரத்திற்கு பாடம் சொன்ன காகம்

ஒரு கிராமத்தில் சுந்தரம் என்கிற பள்ளி மாணவன் இருந்தான். ஒரு நாள் கா... கா.... என்று கத்திக் கொண்டு காகம் ஒன்று பறந்து வந்தது.  சுந்தரத்தின் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சுந்தரம் அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசைபட்டு,  அருகே ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுந்தரம் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து, அங்கும் இங்கும் நடந்தது. சுந்தரம் தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துக்குப் போட்டான்.

crow

காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுந்தரத்திற்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை. இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுந்தரம் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுந்தரம் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. 
மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுந்தரத்தின் அருகில் வந்தது. அவனது கையை ஆவலோடு பார்த்தது. சுந்தரம் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுந்தரம் இப்போது காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. நாளடைவில் சுந்தரமும் காகமும் நண்பர்களானார்கள். சுந்தரம் சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டதைப் போல அவனது வார்த்தைகளுக்குத் தலையை ஆட்டும்.

crow

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுந்தரம் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூண்டு இல்லை, பேசத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுந்தரத்தை அனைவரும் பாராட்டினார்கள்.
நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்

gowtham Sat, 08/10/2019 - 15:22
crow and sundaram crow story  காகம் லைப்ஸ்டைல்

English Title

Crow who taught Sundaram a lesson

News Order

0

Ticker

0 
ஞாபக சக்தி

இதை செய்யுங்க.. அப்புறம் குழந்தைகளின் ஞாபக சக்தியைப் பாருங்க!

இளம் வயதிலேயே ஞாபக சக்தி குறைபாட்டை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயதான பின் காலம் முழுவதும் ஞாபக சக்தி குறைபாட்டால் பிரச்சனை தான்.. ஒரு முறை, இதுவரைக்கும் நீங்கள்,  உங்...


மா இலைகள் 

சர்க்கரை நோயை குணப்படுத்தும் மா இலைகள் 

யார் எல்லாம் போன கோடையில் மாம்பழம் சாப்பிட மறந்து விட்டீர்கள்? உண்மையில் மாம்பழம், மாங்காய் என்றாலே, அதிக சூடு என்று நிறைய பேர் மாங்காயை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அடுத்த முறை மாம...


சோயா மில்க் ஷேக்

எடையைக் குறைக்கும் சோயா மில்க் ஷேக்

தேவையான பொருட்கள் சோயா பால்             -2கப் மசித்த வாழைப்பழம்     -2கப் மாம்பழம்               -1கப் வெனிலா எசன்ஸ்        -1/4 தேக்கரண்டி சர்க்கரை                -2டீஸ்பூன் ...


நாவல் பழம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான நாவல் பழம்

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று ஒளவையார் ஊதி சாப்பிடுவாரே... அந்த நாவல் பழம் தான் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு அருமருந்து. நாவல் பழத்தை சர்க்கரை வியாதிக்கான மருந்தாக...


முல்லா

முல்லா பரிமாறிய சூப்

தனது சமயோசித செயலால் எல்லோராலும் போற்றப்படுபவர் முல்லா நஸ்ருதீன். ஒருமுறை முல்லாவைச் சந்திக்க அவரது சொந்த கிராமத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். அப்படி முல்லாவைப் பார்ப்பதற்காக வந...


பெண்

30ஐ கடந்த பெண்களின் அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு 

செக்ஸ் வாழ்க்கைக்கும், வயதிற்கும் சம்பந்தமேயில்லை. பல பெண்கள், தாங்கள் 30 வயதைத் தாண்டி விட்டாலே இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது என்று தவறான எண்ணத்திற்கு ஆளாகிறார்கள். இந்த...


பயோ பிளாஸ்டிக்

மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பயோ பிளாஸ்டிக்! 

பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு தீர்வாகவும், மாற்றுப்பொருளாகவும் மாம்பழத் தோலிலிருந்து ‌பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். மனிதனுக்கு சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின...


தந்தை,மகன்

அனுபவ அறிவின் மகத்துவம் | நீதிக் கதை

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.  அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு வி...


2018 TopTamilNews. All rights reserved.