‘பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை’ : தந்தைக்கு மகிளா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

‘பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை’ : தந்தைக்கு மகிளா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி விட்டது. பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தாலும், நாளுக்கு நாள் இச்சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டும் குற்றங்கள் குறைந்ததாக இல்லை.

‘பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை’ : தந்தைக்கு மகிளா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

இந்த நிலையில், பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை கவனத்தை ஈர்த்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கன்னி ராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்துவுக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர் தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

‘பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை’ : தந்தைக்கு மகிளா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

மாரிமுத்து மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த போலீசார், அவரை ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்றம், மாரிமுத்துவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், ரூ.8 ஆயிரம் அபராதத்தையும் விதித்தனர்.

புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு அம்மாவட்ட மகிளா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருந்தது. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மகிளா நீதிமன்றங்கள் அதிரடி தண்டனை வழங்குவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.