தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

 

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மைப்பாறையை சேர்ந்தவர் முத்தல்ராஜ்(47). இவரது மகள் சிவராணி காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சிவராணி, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் கண்ணனை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயராமன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரை முத்தல்ராஜ் கட்டையால் அடித்துகொன்றார்.

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இதனையடுத்து, திருவேங்கடம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்தல்ராஜ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோகிலா, முத்தல்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.