மதுரையில் மெக்சிகோ நாட்டு பெண்ணை எரித்த கொன்ற வழக்கில் மார்ட்டினுக்கு ஆயுள்!

 

மதுரையில் மெக்சிகோ நாட்டு பெண்ணை எரித்த கொன்ற வழக்கில் மார்ட்டினுக்கு ஆயுள்!

மெக்சிகோ நாட்டு பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் கணவன் மார்ட்டினுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது மதுரை மகளிர் நீதிமன்றம்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் மார்ட்டின் மாண்ட்ரிக் மன்சூர்- செசில்லா அகஸ்டா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு சென்றதால், மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் விவாகரத்தும் வழங்கியது. மேலும், குழந்தை அடில்லாவுக்கு இருவரும் உரிமை கொண்டாடியதால், இருவரும் தலா பத்து நாட்கள் குழந்தையை வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையில் மெக்சிகோ நாட்டு பெண்ணை எரித்த கொன்ற வழக்கில் மார்ட்டினுக்கு ஆயுள்!

ஆனால், குழந்தையை அழைத்துக்கொண்டு மார்ட்டின் இந்தியா வந்துவிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே, குழந்தையை வளர்த்து வந்தார். இதுகுறித்த விபரம் அறிந்த செசில்லா அகஸ்டா, குழந்தையை பார்ப்பதற்காக தனது தாயை அழைத்துக்கொண்டு ஒந்திஅய வந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு அடில்லாவை பார்க்க சென்றார் அகஸ்டா. அப்போது, மார்ட்டினுக்கும் அகஸ்டாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அகஸ்டாவை மார்ட்டின் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அகஸ்டா திடீரென உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, அகஸ்டாவின் உடலை மதுரை அடுத்த ஆஸ்டின்பட்டியில் கண்மாய் ஓரம் வீசி எரித்துவிட்டு சென்றுவிட்டார் மார்ட்டின்.

பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த உடலை கைப்பற்றி திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மார்ட்டின் சிக்கினார். இந்த வழக்கில் புழல் சிறையில் இருந்த மார்ட்டின், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. மனைவி அகஸ்டாவை கொலை செய்ததையும், தடயத்தை மறைக்க முயற்சித்ததையும் மார்ட்டின் ஒப்புக்கொண்டதால், ஆயுள்தண்டனையும், சாட்சியங்களை அழித்ததற்காக மேலும் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளித்தார் நீதிபதி இளங்கோவன்.

இந்த தீர்ப்பை அடுத்து மார்ட்டினை சிறைக்கு அழைத்து சென்றனர் போலீசார்.