• August
    21
    Wednesday

Main Area

Main



ஈஸியா வாழலாம் வாங்க.. ஜென் கதை

துறவி
துறவி
Loading...

வாழ்க்கையை வாழக் கற்று தருவதில் ஜென் துறவிகள் அற்புதமானவர்கள். ஒருவருக்கு ஜென் மனநிலை வாய்த்து விட்டால், அவரைத் தான் இந்த உலகத்தில் பெரும் அதிர்ஷ்டசாலி என்கிறார்கள் அறிஞர்கள். அப்படியான ஒரு ஜென் துறவி ஒருநாள், அவருடைய சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

rishi

"வாழ்க்கை என்றால் என்ன?" என்பதைச் சொல்லிக் கொடுக்க தனது சீடர்களை அழைத்தார். சீடர்கள் கூட்டமாக ஜென் துறவியைச் சுற்றிலும் நின்றார்கள். அப்போது அவர்களிடம் உதாரணத்திற்கு ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன்னர் எவ்வாறு கஷ்டப்பட்டு வருகிறது என்கிற விஷயத்தை அவர்களுக்கு காண்பித்து புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர்களிடம், பட்டாம்பூச்சியின் கூட்டைக் காண்பித்து, இன்னும் சில நேரங்களில் இந்த பூச்சி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியே வந்து விடும் என்றும் அதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் கூறி மடாலயத்திற்குள் சென்று விட்டார்.

butterfly

அதைப் பார்த்த ஒரு சீடன், அது ஓட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லோசாக உடைத்து விட்டான். அப்படி ஆர்வ மிகுதியால் அந்த சீடன் செய்த செயலால், அந்த பட்டாம் பூச்சி வெளியே வந்து இறந்து விடுகிறது. இதனால் அவன் அந்த பட்டாம் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து மடாலயத்தில் இருந்து துறவி வெளியே வந்தார். உடைத்து, பட்டாம்பூச்சியின் இறப்புக்கு காரணமான மாணவன் அழுதுக் கொண்டிருந்தான். எதற்கு அழுகிறாய் என்று கேட்ட போது, நடந்ததைச் சொன்னான். அவன் சொல்லி அழுது முடிக்கும் வரையில் பொறுமையாய் இருந்த  குரு அவனிடம் பேசினார். பட்டாம்பூச்சி அத்தகைய போராட்டத்தை அனுபவிக்கக் காரணம், அதன் சிறகுகள் நன்கு வளர்வதற்கும், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் தான். அதேப் போலத் தான், நாமும் நமது வாழ்வில் இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். அதற்காக மனமுடைந்து விடக் கூடாது.

rishi

போராட்டங்களை சந்திக்க சந்திக்கத் தான் நமது மனமும் வலுவடையும். பின் எதற்கும் துணிச்சலோடு போராடி, வாழ்வில் முன்னேறலாம் என்றார். எப்படி கடினமான ருசியில் நம்மை எல்லாம் கட்டிப் போடும் பலாப்பழத்தின் சுவையை அனுபவிக்க வேண்டுமானால் கடினமான அதன் தோல்களை நீக்கி, உள்ளிருக்கும் சிக்கல்களை எல்லாம் அறுத்து, சுவைக்கிறோமோ அப்படித் தான் நீங்கள் உங்களுடைய கடினமான பாதைகளை எல்லாம் கடந்தால் வெற்றி நிச்சயம் என்றார் ஜென் குரு.

2018 TopTamilNews. All rights reserved.