அக்டோபர் 18ம் தேதி வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.. டெல்லி போலீசுக்கு அதிகாரம்

அக்டோபர் 18ம் தேதி வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.. டெல்லி போலீசுக்கு அதிகாரம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், அக்டோபர் 18ம் தேதி வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரத்தை டெல்லி போலீசுக்கு துணைநிலை கவர்னர் அனில் பைஜால் அதிகாரம் வழங்கியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதியன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக டெல்லியில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2வது ஆண்டு நிறைவு நாளான ஆகஸ்ட் 5ம் தேதியன்று டெல்லியில் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததையடுத்து புலனாய்வு அமைப்புகள் டெல்லியை மிகுந்த எச்சரிக்கையுடன் வைத்துள்ளன.

அக்டோபர் 18ம் தேதி வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.. டெல்லி போலீசுக்கு அதிகாரம்
அனில் பைஜால்

இது போன்ற சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், அக்டோபர் 18ம் தேதி வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரத்தை டெல்லி போலீசுக்கு டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜால் வழங்கியுள்ளார். கடந்த 19ம் தேதி முதல் இந்த அதிகாரம் டெல்லி போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்.எஸ்.ஏ.-இன் கீழ், எந்தவொரு நபரையும், சந்தேகத்திற்கிடமான அல்லது தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக கருதினால் காவல்துறையினர் கைது செய்ய முடியும்.

அக்டோபர் 18ம் தேதி வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.. டெல்லி போலீசுக்கு அதிகாரம்
டெல்லி போலீஸ்

அதேசமயம் டெல்லி துணைநிலை கவர்னரின் இந்த உத்தரவு வழக்கமான ஒன்றுதான் என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களுக்கு முன்னர் வழங்கப்படும் வழக்கமான உத்தரவுதான் இது என்று அவர்கள் தெரிவித்தனர்.