• February
    25
    Tuesday

Main Area

Main



ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை? மத்திய அரசு வைச்ச செக்!

ஆன்லைன் மருந்து விற்பனை நிறுத்தம்?
ஆன்லைன் மருந்து விற்பனை நிறுத்தம்?

நம் நாட்டில் ஆன்லைனில் மருந்து விற்பனை தற்போது சூடுபிடித்து வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மருந்து வந்து விடும் என்பதால் பலரும் ஆன்லைனில் மருந்து வாங்கி வருகின்றனர். அதேசமயம் ஆன்லைன் மருந்து விற்பனையில் சில குறைபாடுகளும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும், ஆன்லைன் மருந்து விற்பனையால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி மருந்து கடைக்காரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைன் மருந்து விற்பனை

இந்த சூழ்நிலையில், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு உரிமம் அவசியம். எனவே ஆன்லைன் மருந்து விற்பனையை கண்காணிப்பதுடன், விதிமுறை மீறப்பட்டது தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து  யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சி.டி.எஸ்.சி.ஓ.

ஆன்லைனில் மருந்து விற்பனை தொடர்பாக விதிமுறைகள் வகுப்பது தொடர்பான கோரிக்கை பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையில் உள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்து அறிவிக்கை வெளியிடவில்லை என்றால், மருந்து சட்டத்தின்படி, மருந்து கட்டுபாட்டாளர்களால் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு  உரிமம் வழங்க முடியாது. ஆகையால் தற்சமயத்துக்கு ஆன்லைன் மருந்து விற்பனை நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.