எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.790 கோடி… 3 சதவீதம் அதிகம்..

 

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.790 கோடி… 3 சதவீதம் அதிகம்..

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.789.67 கோடி ஈட்டியுள்ளது.

எல்,ஐ.சி.யின் (இந்திய ஆயுள் காப்பீடு கழகம்) துணை நிறுவனம் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ். ஹவுசிங் பைனான்ஸ் துறையை சேர்ந்த இந்நிறுவனம் வீடுகள் கட்ட அல்லது வாங்க கடன் வழங்குகிறது. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.790 கோடி… 3 சதவீதம் அதிகம்..
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் 2020 செப்டம்பா் காலாண்டில் நிகர லாபமாக ரூ.789.67 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ. 767.95 கோடி ஈட்டியிருந்தது. 2020 ஜூன் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபமாக ரூ.824.08 கோடி ஈட்டியிருந்தது.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.790 கோடி… 3 சதவீதம் அதிகம்..
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,987.64 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,980.80 கோடியாக இருந்தது.